மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம்..! இவரின் நிலையை கண்டு வருந்தும் ரசிகர்கள்!

Published : Jul 10, 2020, 01:01 PM IST
மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம்..! இவரின் நிலையை கண்டு வருந்தும் ரசிகர்கள்!

சுருக்கம்

சண்டை பயிற்சி கலைஞரும் நடிகருமான பொன்னம்பலம், நேற்று சிறுநீரக கோளாறு காரணமாக, சென்னை அடையாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது, மருத்துவ மனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

சண்டை பயிற்சி கலைஞரும் நடிகருமான பொன்னம்பலம், நேற்று சிறுநீரக கோளாறு காரணமாக, சென்னை அடையாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது, மருத்துவ மனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமலஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம், நடிப்பை தாண்டி சிறந்த நண்பராகவும் கமலுடன் பழகி வந்தவர் பொன்னம்பலம். மேலும் 80 மற்றும் 90 களில் வெற்றி பெற்ற, முத்து, நாட்டாமை, உள்ளிட்ட பல வெற்றி படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். இவர் மீது வேண்டும் என்றே, சில பழிகள் போடப்பட்டாலும் இவரை மக்கள் பல முறை காப்பாற்றினர். வில்லனாகவே பார்க்கப்பட்ட இவரை ரசிகர்கள் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

அமைதியாக விளையாடியதால், சுவாரஸ்யமாக இவரால் கன்டென்ட் கொடுக்க முடியவில்லை. எனவே கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார். இவர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்தாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் சென்னையில் மனைவி, மகள், மகனுடன் வாழ்ந்து வரும் இவருக்கு திடீர் என, சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர், அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்து நடிகர் கமலஹாசன் உடனடியாக மருத்துவ மனைக்கு விரைந்து, அவருடைய குடும்ப சூழ்நிலையை கருதி மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் இவருடைய குழந்தைகளில் படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பொன்னம்பலத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இவர் மருத்துவ மனையில், பெட்டில் படுத்தபடி தன்னுடைய செல்போன் மூலம் ஒரு விடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து, பொன்னம்பலத்தின் ரசிகர்கள் பலர் இவர் மீண்டும், உடல் நலம் தேறி வரவேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!