
சண்டை பயிற்சி கலைஞரும் நடிகருமான பொன்னம்பலம், சென்னை அடையாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த நடிகர் கமலஹாசன் உடனடியாக விரைந்து அவருக்கு உதவிகள் செய்துள்ளார்.
நடிகர் கமலஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம், நடிப்பை தாண்டி சிறந்த நண்பராகவும் பழகி வந்தவர் பொன்னம்பலம். மேலும் 80 மற்றும் 90 களில் வெற்றி பெற்ற, முத்து, நாட்டாமை, உள்ளிட்ட பல வெற்றி படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். இவர் மீது வேண்டும் என்றே, சில பழிகள் போடப்பட்டாலும் இவரை மக்கள் பல முறை காப்பாற்றினர். வில்லனாகவே பார்க்கப்பட்ட இவரை ரசிகர்கள் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
அமைதியாக விளையாடியதால், சுவாரஸ்யமாக இவரால் கன்டென்ட் கொடுக்க முடியவில்லை. எனவே கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.
இவர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்தாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சென்னையில் மனைவி, மகள், மகனுடன் வாழ்ந்து வரும் இவருக்கு திடீர் என, சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர், அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்து நடிகர் கமலஹாசன் உடனடியாக மருத்துவ மனைக்கு விரைந்து, அவருடைய குடும்ப சூழ்நிலை கருதி மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் இவருடைய குழந்தைகளில் படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பொன்னாபலத்திற்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.