கதறி அழும் பெண்! அதிர வைக்கும் பகீர் காட்சிகள்! 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலருக்கு முன்பே சூர்யா வெளியிட்ட காட்சி!

Published : May 20, 2020, 06:07 PM ISTUpdated : May 20, 2020, 06:13 PM IST
கதறி அழும் பெண்! அதிர வைக்கும் பகீர் காட்சிகள்! 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலருக்கு முன்பே சூர்யா வெளியிட்ட காட்சி!

சுருக்கம்

கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய படங்களே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால்,  இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பின், ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை,  திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத சூழல் உருவாகி உள்ளது. 

கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய படங்களே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால்,  இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பின், ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை,  திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தனர். 

அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்' . இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்  நிறுவனம் தயாரித்துள்ளது. எப்போதும் போல்  இந்த படமும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஜோதிகாவை தவிர, இயக்குனர் பாரதி ராஜா, பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா பிரச்சனையால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால்  'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின்  தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா ஓடிடி பிளாட் ஃபாமில், இந்த படத்தை வெளியிட வெளியிட முடிவு செய்தார். சூர்யாவின் இந்த முடிவிற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்  ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு சூர்யா விற்றதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

கொரோனா பிரச்சனை உச்சத்தில் உள்ள இந்த சமயத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதி சரியான முடிவெடுத்ததாக ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பொன்மகன் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 21ம் தேதி நாளை ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் சில காட்சிகளை தற்போது நடிகர் சூர்யா அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இதை வைத்து பார்த்தல் இந்த படம் சிறுமிகள் கொலை பற்றி கருவை மையமாக வைத்து எடுத்திருக்கலாம் என்பது தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள காட்சிகள் இதோ...

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாய தொறக்காத தங்கமயில்'; 80 சவரன் நகையின் உண்மை தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ட்விஸ்ட்!
அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?