
கொரோனா மூன்றாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல முக்கிய மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக ராஜமௌலியின் பிரமாண்ட தயாரிப்பான ஆர் ஆர் ஆர் ரிலீஸ் தள்ளிப்போனது.. மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக செலவில் ப்ரோமோஷன் விழாவை நடத்தி முடித்திருந்தனர். யாரும் எதிர்பார்க்காத நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்தது.
அதேபோல இரண்டு வருட கடின உழைப்பிற்கு பிறகு ஜனவரி 13-ல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட அஜித்குமாரின் வலிமை விதமாக கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்கி இருந்தார்...
இதற்கிடையே ராதே ஷ்யாம், தனுஷின் மாறன் படங்களின் ரிலீசுக்கு டவுட்டில் தான் இருந்து வருகிறது. இவ்வாறு திரையரங்குகளை 100 சதவீதம் ஆக்கிரமிக்கும் என எதிரிபார்க்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிபோனதை தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ள சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி சசிகுமார் நடிப்பில் உருவான கொம்பு வச்ச சிங்கமடா, காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள நாய்சேகர், கார்பன் ஆகிய திரைப்படங்கள் வரும் 13ஆம் தேதி திரையிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதோடு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ள அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படத்தையும் வெளியிட ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.