ரஜினிக்கு அஜித் வைத்த அதிரிபுதிரி அதிரடி செக்! பேட்ட ரிலீஸை பதற விட்டிருக்கும் தல யின் விஸ்வாசம்!

By vinoth kumarFirst Published Nov 30, 2018, 3:49 PM IST
Highlights

பேட்ட படத்தின் தயாரிப்பாளர் சன் டி.வி. கலாநிதி மாறன் என்பதால், வழக்கமான பிடிவாத தன்மையுடன் விட்டுக் கொடுக்காமல் இருந்தார்கள். 
இந்த விவகாரம் அஜித்தின் காதுகளுக்கு போக, ‘யாரா இருந்தால் என்ன? மோதிப் பார்ப்போம்! எத்தனை படம் வந்தாலும், நல்லா இருக்கிற படத்தைத்தான் ரசிகன் கொண்டாடுவான்.

செம்ம ஹேப்பியில் இருக்கும் ரஜினிக்கு அஜித் செமத்தியாக செக் வைத்திருப்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட். 2.0 படத்தின் தொழில்நுட்ப பிரம்மாண்டம் அந்தப் படத்தை சர்வதேச அளவில் பேச வைத்துள்ளது. இதனால் ரஜினி ஏக சந்தோஷத்தில் இருக்கிறார். அதேவேளையில் அவரது அடுத்த படத்துக்கு, தல தரப்பின் கைங்கர்யத்தால் பெரும் சிக்கல் வந்துவிட்டதுதான் பிரச்னையே! 

தல யால், ரஜினிக்கு சிக்கலா? யார் வம்பு தும்புக்கும் போகாமல் தன் வழி தனி வழின்னு போகும் தல, அப்படியெல்லாம் பண்ண மாட்டாரே? என்று நீங்கள் வியக்கலாம். அதுவும் சரிதான். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி, தல யால் ரஜினிக்கு சிக்கல் வந்துவிட்டதுதான் உண்மை. 

விளக்குகிறோம் கேளுங்கள்... தை பொங்கலுக்கு அஜித்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸாகிறது. இதற்காக வெறித்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறது இயக்குநர் சிறுத்தை சிவாவின் வட்டாரம். அடுத்தடுத்து படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் டிராக், ஆல்பம் வெளியீடு என்று வரிசையாக வைப்ரேஷன்களை கிளப்பிக் கொண்டு போயி கடைசியாக பொங்கலில் படத்தை ரிலீஸ் செய்து, பட்டையை கிளப்புவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். பிளான் படி எல்லாம் பக்காவாக போய்க் கொண்டிருக்கிறது. சமீப காலங்களில் தங்கள் தலைவனால் எந்த சந்தோஷமும் இல்லை என்பதால் கொலை பசியில் கிடக்கும் தல ரசிகர்களை, திணறத் திணற பொங்கலில் தீபாவளி கொண்டாட வைக்க வேண்டுமென்பதே இயக்குநரின் நோக்கம்.

 

இந்நிலையில்தான் தல-க்கும் தலையான ரஜினியின் ‘பேட்ட’ படமும் பொங்கல் ரிலீஸ் என்று அறிவிப்பு வந்தது. ’ஒரே சமயத்தில் ரெண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸா? தவிர்க்கலாமே! விவேகம் தோல்வியடைந்ததால் வருத்தத்தில் இருக்கும் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பும் வருமானம் பார்க்கட்டுமே! மேலும் டிசம்பர் 29-ல் தான் ரஜினியின் பிரம்மாண்ட படமான 2.0 ரிலீஸாகிறது அதற்கடுத்த சில வாரங்களிலேயே ரஜினியின் அடுத்த படமா?  யோசியுங்கள்.’ என்று சினிமா உலகின் முக்கியஸ்தர்கள் கருத்து தெரிவித்தார்கள். 

ஆனால் பேட்ட படத்தின் தயாரிப்பாளர் சன் டி.வி. கலாநிதி மாறன் என்பதால், வழக்கமான பிடிவாத தன்மையுடன் விட்டுக் கொடுக்காமல் இருந்தார்கள். இந்த விவகாரம் அஜித்தின் காதுகளுக்கு போக, ‘யாரா இருந்தால் என்ன? மோதிப் பார்ப்போம்! எத்தனை படம் வந்தாலும், நல்லா இருக்கிற படத்தைத்தான் ரசிகன் கொண்டாடுவான். நம்ம படம் நல்லா இருந்தால் அந்த வெற்றியை யாரும் தடுக்க முடியாது.’ என்று தன் சினிமா பாணியிலேயே தயாரிப்பாளருக்கு பதில் சொல்லிவிட்டார். 

அஜித்தே சொன்ன பின்னே என்ன, விடுவார்களா! படத்தை தமிழகத்தில் விநியோகிக்கும் பொறுப்பை கே.ஜே.ஆர்.ராஜேஷிடம் கொடுத்தார்கள். அவர் மளமளவென சென்னை, செங்கல்பட்டு மல்டி ஃபிளக்ஸ் தியேட்டர்களை தவிர்த்து தமிழகம் முழுவதும் இருக்கிற சுமார் 65 முதல் 70 சதவீதம் தியேட்டர்களை விஸ்வாசம் ரிலீஸுக்காக புக் பண்ணிவிட்டார். மீதியிருக்கும் தியேட்டர்களில் பெரும்பாலானவை டப்பா தியேட்டர்கள்தானாம். 

இவற்றில் போய் ரஜினிகாந்தின், அதுவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், மல்டி ஸ்டார்ஸ் படத்தை ரிலீஸ் பண்ணுவார்களா? என்பதே இப்போதைய கேள்வி.  2.0வின் ஓப்பனிங் சக்ஸஸ் மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினியின் காதுகளுக்கு இந்த தகவல் சென்றது மனிதர் அப்செட் ஆகிவிட்டாராம். அஜித் தரப்பின் இந்த அதிரடியை எதிர்பாராத கலாநிதி மாறன் தரப்பு, இப்போது சுதாரித்துவிட்டு அடுத்தடுத்த மூவ்களில் இறங்கியுள்ளது. சொன்னபடி பேட்ட பொங்கலுக்கு ரிலீஸாகுமா? ரஜினி - கலாநிதி இருவரும் தங்கள் ஈகோவை அஜித்துக்காக தள்ளிவைத்து, பேட்ட ரிலீஸை ஒத்தி வைப்பார்களா? என்பதெல்லாம் அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.

click me!