அமெரிக்காவிலும் வசூல் டல் தான் ஆனால் பரவால்ல... நியூசிலாந்தில் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு தெரியுமா?

Published : Nov 30, 2018, 02:33 PM ISTUpdated : Nov 30, 2018, 02:34 PM IST
அமெரிக்காவிலும் வசூல் டல் தான் ஆனால் பரவால்ல... நியூசிலாந்தில் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே அதிகவசூலை ஈட்டிய திரைப்படமாக ஆமிர்கானின் ’தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ இருந்து வரும் நிலையில், அதை ஓரம் கட்டும் விதமாக ரஜினியின் 2.0 படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை குவித்து வருகிறது.  

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகியோர் கைகோர்த்த இந்திய சினிமா உலகம் இதுவரை கண்டிராத ரூ. 543 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 நேற்று உலகம் முழுவதும் 10,000
தியேட்டரில்  வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே, விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமம் என ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியுள்ளது. 

ஹாலிவுட் சிட்டியான அமெரிக்காவிலும் 2.0 வெளியாகியுள்ளது. இப்படம் 224 பகுதிகளில் ரிலீஸ் ஆனது. படத்தின் உள்ளூர் வசூலை பார்த்து விட்டோம். அமெரிக்காவில் அதன் வசூல் எவ்வளவு தெரியுமா? அமெரிக்காவில் மொத்தம் 224 பகுதிகளில இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. 

அங்குள்ள இந்தியர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். முதல் நாள் வசூல்படி மாலை 5 மணி வரை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 451 டாலர் வசூல் செய்துள்ளது. இரவு 10 மணி வரை ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் நியூசிலாந்தில் ரூ. 11.11 லட்சமும், ஆஸ்திரேலியாவில் ரூ. 58.46 லட்சமும் வசூல் செய்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!