ரியாமிகா தற்கொலைக்கு காரணம் சக நடிகர்களின் மோசமான நடவடிக்கை! வெளிவந்த பகீர் தகவல்!

Published : Nov 30, 2018, 01:54 PM IST
ரியாமிகா தற்கொலைக்கு காரணம் சக நடிகர்களின் மோசமான நடவடிக்கை! வெளிவந்த பகீர் தகவல்!

சுருக்கம்

சினிமா மீது ஏற்பட்ட மோகம் காரணமாக இன்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு, சென்னை வந்தவர் நடிகை ரியாமிகா. இவரின் சகோதரர் துணை இயக்குனர் என்பதால் அவரின் உதவியோடு ஆரம்ப காலத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 

சினிமா மீது ஏற்பட்ட மோகம் காரணமாக இன்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு, சென்னை வந்தவர் நடிகை ரியாமிகா. இவரின் சகோதரர் துணை இயக்குனர் என்பதால் அவரின் உதவியோடு ஆரம்ப காலத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 

அந்த வகையில் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்', 'எக்ஸ் வீடியோஸ்' போன்ற படங்களில் கதாநாயகியாகவும், ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். 

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம், சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் உள்ள அவருடைய வீட்டில்   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் காதலருடன் ஏற்பட்ட பிரச்சனை என்று கூறப்பட்டதே தவிர வேறு எந்த காரணமும் வெளிவராத நிலையில், போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, இவர் தொடர்ந்து திரைப்படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருவதாக கூறி இவரை, சக நடிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்ததாகவும், இப்படியெல்லாம் நடித்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது என கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரியாமிக்கா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இது குறித்து அவருடைய சகோதரரிடம் விசாரித்த போது... " ரியாமிகா முதல் நாள் இரவு முழுவதும் எங்கு இருந்தார் என தெரியவில்லை... காலை நேரத்தில் தான் மிகவும் சோர்வாக வந்தார். வந்து சக நடிகர்கள் தன்னை பற்றி விமர்சித்து பேசுவதாக வேதனையோடு பேசினார், பின்பு தூங்க சென்றார் என தெரிவித்தார். அதே போல் ரியாமிகாவின் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை என்றும் தான் அவருடைய சித்தி மகன் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதே போல் இவருடைய காதலர் தினேஷிடம் விசாரித்தது போது... "ரியாமிக்கா, ஜிம்மிற்கு வந்தபோது அவருக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின் அது காதலாக மாறியது. "தனக்கும் ரியாமிகாவிற்கும் சாதாரண காலர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை தான் இருந்தது. அவர் இரவு நேரத்தில் நண்பர்களுடன் வெளியில் சுற்றுவது பிடிக்காமல் அவரை கண்டித்தது உண்மை ஆனால் அவர் அதற்கு தன்னிடம் கோவம் கொண்டதால் நான் அவரிடம் சரியாக பேசுவது இல்லை. எனினும் ரியாமிகா தற்கொலை செய்து கொண்ட அன்று காலை அவருடைய வீட்டிற்கு வந்தேன் அவர் தூங்கி கொண்டிருப்பதாக அவருடைய சகோதரர் கூறியதால் ரியாமிகாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி அங்கிருந்து புறப்பட்டு விட்டேன். 

மாலை ரியமிகாவை சந்திக்க நான் வீட்டிற்கு போன போதும் அவருடைய அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் நானும் அவருடைய சகோதரம் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, ரியாமிகா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.

எனினும் அவருடைய குடும்பத்தினர் ரியாமிகா மிகவும் தைரியமான பெண் என்றும், சக நடிகர்களின் வார்த்தைக்காக மட்டும் அவர் தற்கொலை முடிவை எடுக்க வாய்ப்பு என்றும், ரியாமிகா தற்கொலையில் வேறு எதோ மர்மம் உள்ளது என கூறியுள்ளனர். இதனால் தற்போது போலீசார்... ரியாமிகா தற்கொலை செய்வதற்கு முதல் நாள்  இரவு முழுவதும் எங்கு இருந்தார் என்பது பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?
மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்