புதுச்சேரியில் அதிரடியாக உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட் ரேட்! எவ்வளவு உயர்வு தெரியுமா ?

By manimegalai a  |  First Published Nov 9, 2023, 6:44 PM IST

புதுவையில் செயல்படும் திரையரங்குகளில் திடீர் என டிக்கெட் விலை அதிகரித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 


புதுவையில் செயல்படும் திரையரங்குகளில் கட்டணம்  உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி குறைந்த பட்சம் 10 ரூபாய்..அதிகபட்சம் 30 ரூபாய் என டிக்கட் விலை உயர்ந்துள்ளது..

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு புதுச்சேரியில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கு செயல்பாடு அரசு அனுமதி கொடுத்தது. அதன்படி  2020ம்ஆண்டு அக்.15 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் போது மக்கள் நலன் கருதி  புதுவையில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அண்மையில் அரசுக்கு மனு அளித்தார். இதனை ஏற்று கட்டண உயர்வை ஆட்சியர் வல்லவன் உத்தரவை பிறப்பித்துள்ளார்...

இதன்படி 3 ம் வகுப்பு 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்வு... 2ம் வகுப்பு 75 ரூபாயில் இருந்து 100 ரூபாய், முதலாம் வகுப்பு 100 ல் இருந்து 130 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. பால்கனி 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக உயர்ந்துள்ளது.160 ரூபாய் என இருந்த Box டிக்கெட் 180ஆக உயர்த்தப்பட்டுள்ளது... குறைந்த பட்சம் 10 ரூபாய் அதிகப்ட்சம் 30 ரூபாய் என உயர்த்தப்படுறது. இந்த கட்டண உத்தரவு நாளை வெள்ளிகிழமை முதல் அமலுக்கு கொண்டுவர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூச்சு முட்டும் கவர்ச்சி..! உள்ளாடை போடாமல் கிளாமர் டாலாக மாறி சகட்டு மேனிக்கு போஸ் கொடுத்த CWC சுனிதா!
 

click me!