
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 62. இந்த திரைப்படத்தில் கமர்ஷியலை விட அரசியல் கொஞ்சம் துக்கலாக இருக்கப்போகிறது என, ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
தற்போது தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் மாற்றங்கள் சின்னக் குழந்தைகள் கூட கேலி செய்யும் அளவிற்கு இருக்கிறது. இந்த சூழலில் தற்போது வரவிருக்கும் தளபதி62 திரைப்படத்தில், தமிழகத்தில் நடைபெற்ற சில அரசியல் போராட்டங்கள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்போது தளபதி 62-க்காக மேலும் ஒரு அரசியல் சம்பவம் படமாக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் தளபதி62 படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ஒரு புகைப்படத்தின் மூலம், இரண்டு அரசியல் தலைவர்கள் இணைவதற்கு நடத்திய இணைப்பு விழா காட்சி படமாக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
அது யாரை குறிப்பிடுகிறது என்பது படத்தை பார்க்கும் போது தான் தெளிவாக புரியும். என்றாலும் இப்போது நிலவும் சூழலுக்கு கமர்ஷியலை விட, அரசியல் தான் சிறந்த பொழுதுபோக்கு என திரையுலகினர் நன்கு தெரிந்துவைத்திருக்கின்றனர்.
விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம், வரும் தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகிவருகிறது. இதையெல்லம் பார்க்கும் போது மெர்சலுக்கு ஜி.எஸ்.டி எப்படி இலவச விளம்பரம் தேடித் தந்ததோ, அதே போல தளபதி 62-ற்கு ஒரு விளம்பரம் இப்போதே ரெடி என்று மட்டும் தெரிகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.