
இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 'விஜய்-61 ' படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது, ஐரோப்பாவில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வரவுள்ளதாக ஏற்கனவே அட்லீ தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
ஆனால் ரசிகர்கள் ஒரு சிலர் அதற்குள் தாமாகவே சில போஸ்டர்களை உருவாக்கி அதனை சமூகவலையத்தளத்தில் பரப்பி வருகின்றனர். இதில் விஜய் காலில் ஷு அணிந்து கையில் திரிசூலத்தை வைத்திருப்பது போல் ஒரு போஸ்டர் உருவாக்கியுள்ளனர்.
இதற்கு இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்து விஜய் மீது புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால், ரசிகர்கள் உருவாக்கிய போஸ்ட்டருக்கும், விஜய்க்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது என பலரும் கோபமாக கருத்து கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.