பத்மஸ்ரீ விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை... தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம்!

By manimegalai aFirst Published Apr 17, 2021, 2:09 PM IST
Highlights

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர் என்பதை தாண்டி, சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக சிந்தனையாளர் என ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அங்கீகாரம் பதித்த, நடிகர் பத்மஸ்ரீ விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.
 

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர் என்பதை தாண்டி, சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக சிந்தனையாளர் என ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அங்கீகாரம் பதித்த, நடிகர் பத்மஸ்ரீ விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.

தமிழ் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முன்னணி காமெடி நடிகரான விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே விவேக்கின் உடல் நிலை மோசமாக இருந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 59 வயதே ஆன விவேக் திடீரென மரணமடைந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்த செய்தியை கேள்விப்பட்ட திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விவேக் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், ரசிகர்கள், மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் நேரில் வந்தும், சமூக வலைத்தளம் மூலமாகவும்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இன்று மாலை 5 மணி அளவில் விவேக் உடல் விருகம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. 

இந்நிலையில் பத்மஸ்ரீ விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவரது கலை சமூக சேவையை கௌரவிக்கும் விதமாகவும், அவரது உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம், விவேக் உடலுக்கு காவல் துறை சார்பில் மரியாதை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. 
 

click me!