
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர், ராஜ் குந்திரா, வெளிநாட்டு செயலிகளுக்கு ஆபாச படம் தயாரித்த வழங்கி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மேலும் இவரது ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. கணவரை தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் மீது தற்போது மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன் , Iosis Wellness Centre என்கிற நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் பல இடங்களில் ஃபிட்னஸ் சென்டர்கள் துவங்கினார். இப்படி பல முக்கிய பகுதிகளில் ஃபிட்னஸ் சென்டர் திறக்க கோடி கணக்கில் பணம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. சில இடங்களில் இவரது ஃபிட்னஸ் சென்டர்கள் திறக்கப்பட்டாலும் காலப்போக்கில் அது காணாமல் போனது.
இதன் காரணமாக தான் தற்போது புதிய பிரச்சனையில் சிக்கி உள்ளார் ஷில்பா ஷெட்டி. லக்னோவை சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோஹித் வீர் சிங் ஆகிய இருவரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி, பிட்னஸ் சென்டர் கிளைகளை லக்னோவில் துவங்க கோடி கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஃபிட்னஸ் சென்ட்டரையும் திறக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து பணம் கொடுத்தவர்கள் பல முறை இவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பணத்தை இழந்த ஜோத்ஜனா சவுகான், ரோஹித் வீர் சிங் ஆகிய இருவரும் லக்னோ போலீஸில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் சுனந்தா மீது புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து இவர்கள் இருவரிடமும் உரிய விசாரணை நடத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதும். இந்த பிட்னஸ் சென்டர் நிறுவனத்தில் தலைவராக ஷில்பா ஷெட்டியும் அவரது தாயார் இணை இயக்குனராகவும் இருந்துள்ளனர், எனவே இவர்கள் மீது தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தன்னுடைய கணவரின் பிரச்சனையில் இருந்தே இன்னும் மீண்டு வராத ஷில்பா ஷெட்டி மீது, பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.