'ஆயிரத்தில் ஒருவன் 2 ' பணிகள் கிடப்பில் போடப்பட்டதா..? தன்னுடைய பாணியில் நச் பதிலடி கொடுத்த செல்வராகவன்..!

Published : Aug 09, 2021, 04:51 PM ISTUpdated : Aug 09, 2021, 04:55 PM IST
'ஆயிரத்தில் ஒருவன் 2 ' பணிகள் கிடப்பில் போடப்பட்டதா..?  தன்னுடைய பாணியில் நச் பதிலடி கொடுத்த செல்வராகவன்..!

சுருக்கம்

நடிகர் தனுஷ் அவரது சகோதரர் இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட, 'ஆயிரத்தில் ஒருவன் 2 ' படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டதாக வெளியான தகவலுக்கு, வழக்கம் போல் தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் செல்வராகவன்.

நடிகர் தனுஷ் அவரது சகோதரர் இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட, 'ஆயிரத்தில் ஒருவன் 2 ' படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டதாக வெளியான தகவலுக்கு, வழக்கம் போல் தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் செல்வராகவன்.

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி புதுப்பேட்டை, காதல் கொண்டேன் படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படங்களாக உள்ளது. அதேபோல் இவர்களது வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக் இசை. சமீபத்தில் 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைய உள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். 

அத்துடன் செல்வராகவன் - தனுஷ்- யுவன் ஷங்கர் ராஜா மூவர் கூட்டணி மீண்டும் திரையில் வர உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் தனுஷ், செல்வராகவன் ரசிகர்கள் செம்ம ஹேப்பியாகினர். செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமா சென் உள்ளிட்டோர் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் கடந்த 2010ம் ஆண்டு வெளியானது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிரட்டிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் தனுஷை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தார்.

தற்போது தனுஷ் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமான படங்களில் பிசியாக நடித்து வருவதால், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பிலும் விரைவில் இணைவார் என கூறப்பட்டது. மேலும் தனுஷை தொடர்ந்து செல்வராகவனும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் பிசியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று, 'ஆயிரத்தில் ஒருவன் 2  ' படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டதா? என சந்தேகத்துடன் எழுப்பிய கேள்விக்கு தன்னுடைய பாணியில் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.

எப்போது அந்த மர்மமான ஆரம்பகட்ட பணிகள் நடந்தது என்பதை சொல்ல முடியுமா? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார் என்று கூற முடியுமா? உங்களது தரப்பிலிருந்து ஆதாரங்களை சரிபார்க்கவும் என கூறியுள்ளார். இதன் மூலம் இந்த படத்தின் பணிகள் இன்னும் துவங்க வில்லை என்பதும், படக்குழு அறிவித்தது போல், 2024 ஆம் ஆண்டு இந்த படத்தின் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!
ஜன நாயகன்' சாம்ராஜ்யம்; 60 நிமிடத்தில் 1 மில்லியன் வியூஸ்; யூடியூப்பை அதிர வைத்த விஜய்யின் 'ஒரு பேரே வரலாறு’ செய்த சாதனை!