9 முறை மூளையில் அறுவை சிகிச்சை... பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Aug 9, 2021, 4:11 PM IST

8 முறை இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் படிப்படியாக நடிகை சரண்யா குணமடைந்து வந்துள்ளார்


மலையாள சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சரண்யா. தொடர் தலைவலியால் அவதிப்பட்டு வந்த இவருக்கு, 2012ம் ஆண்டு முதலே மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் கூறினர். அந்த ஆண்டு முதல் அறுவை சிகிச்சை நடைபெற்று சரண்யா நல்ல படியாக வீடு திரும்பினார். ஆனால் சில மாதங்களிலேயே அவருக்கு மீண்டும் தலைவலி ஏற்பட்டது. 

Tap to resize

Latest Videos

என அதற்கு அடுத்த ஆண்டே சரண்யாவிற்கு மூளையில் உள்ள கட்டியை அகற்ற மருந்துவர்கள் சர்ஜரி செய்தனர். ஆனால் தொடர்ந்து சரண்யாவிற்கு  தலைவலி ஏற்பட்டதால் அடுத்தடுத்து 8 முறை மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சரண்யாவின் மருத்துவ சிகிச்சைக்காக நண்பர்கள் மற்றும் டெலிவிஷன் நடிகர்கள் சங்கம் உதவிக்கரம் நீட்டியது. 

இதன்பின், 8 முறை இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் படிப்படியாக நடிகை சரண்யா குணமடைந்து வந்துள்ளார். இறுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் நலமுடன் இருப்பதாக புகைப்படத்துடன் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் உடல் நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரண்யா, சிகிச்சை பலனின்றி காலமானார். கடும் போராட்டங்களுக்குப் பிறகு மீண்டு வந்து கொண்டிருந்த சரண்யாவின் திடீர் மறைவு ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

click me!