'மெஸ்ஸி' பெயர் போட்ட ஜெர்ஸில் சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..! உருக்கமான பதிவு..!!

Published : Aug 09, 2021, 01:11 PM IST
'மெஸ்ஸி' பெயர் போட்ட ஜெர்ஸில் சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..! உருக்கமான பதிவு..!!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், 'மெஸ்ஸி'-யின் பெயர் பொறித்த ஜெர்சி அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதுடன், லைக்குகளை குவித்து வருகிறது.  

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், 'மெஸ்ஸி'-யின் பெயர் பொறித்த ஜெர்சி அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதுடன், லைக்குகளை குவித்து வருகிறது.

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து விளையாட்டு வீரரான லயோனல் மெஸ்ஸி. 34 வயதாகும் இவர்... சுமார் 21 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப் அணிக்கு விளையாடி பல வெற்றிகளை பெற்றுத்தந்த நிலையில், சமீபத்தில் அந்த அணியில் இருந்து விலகுவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவர் கண்ணீர் பொங்க இந்த அணியில் இருந்து விடைபெற்றது பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்தது.

இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக, பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், மெஸ்ஸி குறித்து சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து தங்களது வாழ்த்துக்களை கூறி அவர் மீதான அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான, கீர்த்தி சுரேஷ், மெஸ்ஸி என பெயர் எழுதப்பட்ட ஜெர்ஸியை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து,  அவருக்கு  தலை வணங்குவதாக தெரிவித்திருந்தார். இந்த புகைப்படத்தை இவர் பதிவு செய்த சில மணிநேரங்களிலேயே சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!