கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சல்யூட்... ஜிப்ரான் இசையில் வெளியான அசத்தல் பாடல் இதோ...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 19, 2020, 6:59 PM IST
Highlights

இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது உயிரையும் பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றனர். அவர்களை கெளரவிக்கும் விதமாக காவல்துறை சார்பில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது போல் தோன்றினாலும், கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது உயிரையும் பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றனர். அவர்களை கெளரவிக்கும் விதமாக காவல்துறை சார்பில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சார்பில்  "சலாம் சென்னை" என்ற பாடல் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் பங்கேற்று நடித்த இந்த குறும்படத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் தெற்கு கூடுதல் ஆணையர் தினகரன், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், கூடுதல் ஆணையர் தலைமையகம் அமல்ராஜ், கிழக்கு இணை ஆணையர் சுதாகர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

இதையும் படிங்க: பிக்பாஸுக்காக இப்படியா?... பிரபல சீரியலை அவசரமாக முடித்த விஜய் டி.வி... கடுப்பில் ரசிகர்கள்...!

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான், நிறைய பாடல்களை தான் இசை அமைத்திருந்தாலும், மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இசையமைக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பாடலில் தனக்கு பங்களித்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியது, சென்னையில் 2,400 காவல்துறையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளானபோதும் சென்னை காவல்துறை கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சென்னை மக்களின் ஆதரவைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை கொரோனா சூழல் காரணமாக காணமுடியாமல் போன சென்னை மக்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பாடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை இணைத்ததாகவும் கூறினார்.

click me!