ஜே.கே.ரித்தீஸ் இறந்த ஒரே மாதத்தில் போலீஸ் விசாரணையில் சிக்கிய மனைவி! பரபரப்பு புகார்!

Published : May 17, 2019, 11:38 AM ISTUpdated : May 17, 2019, 12:10 PM IST
ஜே.கே.ரித்தீஸ் இறந்த ஒரே மாதத்தில் போலீஸ் விசாரணையில் சிக்கிய மனைவி! பரபரப்பு புகார்!

சுருக்கம்

பிரபல அரசியல்வாதியும், நடிகருமான ஜே .கே.ரித்தீஷ் கடந்த மாதம், தேர்தல் பிரச்சாரத்திற்காக ராமதபுரத்திற்கு சென்ற போது, திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

பிரபல அரசியல்வாதியும், நடிகருமான ஜே .கே.ரித்தீஷ் கடந்த மாதம், தேர்தல் பிரச்சாரத்திற்காக ராமதபுரத்திற்கு சென்ற போது, திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இவருடைய மனைவி ஜோதி, ஆபாசமாக பேசியும் அடியாட்களை கொண்டு வந்து, மிரட்டல் விடுவதாகவும் அவருடைய வீட்டில் வேலை செய்த கேசவன் என்பவர், சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரில் கூறியுள்ளதாவது... "கடந்த 10 ஆண்டுகளாக ஜே .கே .ரிதீஷிடம்  நான் பணியாற்றி வருகிறேன். அவர், அவருக்கு சொந்தமான வீட்டில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் தங்கி கொள்ளுமாறு கொடுத்து விட்டார். இதனால் அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை.

இந்நிலையில் அவருடைய மனைவி ஜோதி, தனக்கு வர வேண்டிய தொகை ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும் என, அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ளார். அதே போல் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஜோதியிடம் வீட்டை கொடுத்து விட்டு ஓடிவிடு என, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய புகாரில் கூறியுள்ளார்.

கேசவன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ஜே .கே.ரித்தீஷ் மனைவி ஜோதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி