அய்யோ நான் அவனில்லை ! அதிமுக பிரச்சார ஆடியோ குறித்து புலம்பும் விஜய சேதுபதி !!

By Selvanayagam PFirst Published May 16, 2019, 11:45 PM IST
Highlights

நான் இதுவரை எந்தக் கட்சிக்கும் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் நோக்கத்தில் பேசியதில்லை என்றும் அதிமுகவுக்கு ஆதரவாக நான் பேசியதாக வெளியான ஆடியோ குரல் என்னுடையது அல்ல என்றும் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி போலவே ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிஜய் சேதுபதி அதிமுகவுக்கு ஆதரவு தருகிறார் என அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுக்கத் தொடங்கினர்.

மேலும் தற்போது அந்த ஆடியோ வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களுக்கும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதியைப் போல ஒரு பலகுரல் கலைஞரைப் பேசவைத்து வெளியாகியுள்ள ஒலிநாடா சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த ஆடியோ  சில இடங்களில் அச்சு அசல் அப்படியே விஜய் கேதுபதி  குரலிலேயே உள்ளது..

இது தொடர்ப்க விளக்கம் அளித்துள்ள  விஜய் சேதுபதி, எனது குரலை ஏன்  பயன்படுத்தினாங்கனு தெரியலை. என் ரசிகர்களும் என்கிட்ட இதைப் பற்றிச் சொன்னாங்க. நான் அந்தத் தொகுதி மக்களுக்குச் சொல்வது ஒன்றுதான். அது என் குரலே இல்ல" என்றார். 

மேலும், தேர்தலில் வாக்களிப்பது குறித்து அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு அறிவுரையாக, உங்க தொகுதிக்கு யார் நல்லது செய்யவாங்கன்னு நினைக்கறீங்களோ, அவங்களுக்கு ஓட்டு போடுங்க. ஆனா, நிச்சயம் ஓட்டு போடுங்கள் என விஜய் சேதுபதி தெரிவித்தார்.

click me!