பட விளம்பரத்துக்காக இவ்வளவு கேவலமாகவா முகநூல் பதிவு போடுவார் ஒரு நடிகை?...கொந்தளிக்கும் ரசிகர்கள்...

Published : Jul 05, 2019, 11:00 AM ISTUpdated : Jul 05, 2019, 11:02 AM IST
பட விளம்பரத்துக்காக இவ்வளவு கேவலமாகவா முகநூல் பதிவு போடுவார் ஒரு நடிகை?...கொந்தளிக்கும் ரசிகர்கள்...

சுருக்கம்

இன்று கேரளாவில் ரிலீஸாகும் ‘எவிடே’படத்துக்காக தனது முகநூல் பக்கத்தில் விநோதமான பதிவு ஒன்றைப் பகிர்ந்த பிரபல நடிகை ஆஷா சரத் மீது போலீஸில் புகார்கள் குவிகின்றன. ஒரு தவறான வீடியோவைப் பதிவிட்டதன் மூலம் அவர் தனது முகநூல் தொடர்பாளர்களின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்ற புகார் எழுந்துள்ளது.

இன்று கேரளாவில் ரிலீஸாகும் ‘எவிடே’படத்துக்காக தனது முகநூல் பக்கத்தில் விநோதமான பதிவு ஒன்றைப் பகிர்ந்த பிரபல நடிகை ஆஷா சரத் மீது போலீஸில் புகார்கள் குவிகின்றன. ஒரு தவறான வீடியோவைப் பதிவிட்டதன் மூலம் அவர் தனது முகநூல் தொடர்பாளர்களின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்ற புகார் எழுந்துள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத். கமல் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் இவர் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இவர் நடித்த ‘எவிடே’ என்ற படம் இன்று வெளியாகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன் காட்சியளித்த ஆஷா சரத், தனது கணவனை சில நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவின் அடியில், இது ‘எவிடே’ படத்திற்கான விளம்பரம் என்று   குறிப்பிடப்பட்டிருந்தது எனினும் பலரும் அதைக் கவனிக்கவில்லை. இதனால் அவர் கூறியது உண்மை என்று பலரும் கருதி பதட்டம் அடைந்தனர்.

இதுகுறித்து முதலில்  மஜித் என்பவர்  இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘ஆஷா சரத் வெளியிட்டுள்ள வீடியோ தவறான முன் உதாரணமாகும். பார்ப்பதற்கு இது சாதாரண விஷயமாக இருந்தாலும், இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறியுள்ளார். அந்த முதல்  புகாரைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் தாங்களும் ஆஷாவின் வீடியோவை உண்மை என்று நம்பி மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார்களை பதிவு செய்துவருகின்றனர். நடிகை ஆஷா சரத்தை அவரது முகநூல் பக்கத்தில் சுமார் 15 லட்சம் பேர் பிந்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ