
உங்களுடைய இந்தியை ஃபியர் கிரில்ஸ் எப்படி புரிந்துக்கொண்டார் என மக்கள் என்னை எங்குபார்த்தாலும் கேட்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார், கேட்பவர்களுக்கு அந்த ரகசியத்தையும் நான் கூறிவருகிறேன் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சுவாரஸ்மாக தெரிவித்துள்ளார்.
டிஷ்கவரி சேனலை ஆன் செய்தாலோ, அதில் சதா 24 மணிநேரமும் தோன்றி சாகசம் செய்பவர் பியர் கிரில்ஸ், அவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஊடாக அவர் கடக்கும் காடு, மலை, ஆறு, கடல் நதி, என அவருடன் பயணித்து கற்பனையில் கரையாதவர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு, நிகழ்ச்சியில் வேகம், விறுவிறுப்பு, சமயோஜத புத்தியுடன் செயல்படும் பியர் கிரில்ஸ்ஸை பாராட்டாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அவருடன் மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியில் பயணிக்க பலர் விரும்பினாலும், உண்மையிலேயே அவருக்கு ஈடு கொடுத்து செல்ல மனிதில் தனி தைரியமும், உடலில் தனித்தெம்பும் இருக்க வேண்டும்.
இப்படி உலக புகழ் பெற்ற சாகசக்காரரான பியர்ல் கிரில்ஸ்வுடன் இந்தியப்பிரதமர் மோடி இந்திய வனப்பகுதியில் பயணம் மேற்கொண்டு உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். பியர்கிரில்ஸ்ஸே ஆச்சரியப்படும் வகையில் காடு, மலை, நதிகள் என பயணித்து கிரில்ஸ்க்கு டப் கொடுத்தவர் மோடி. தன் இளமைப் பருவம் முதல் பிரதமர் பதவிவரை உயர்ந்த தன் அனுபவங்களை பிரதமர் இந்தி மொழியில் சொல்ல அதை புரிந்துகொண்டு பியர்ல் கிரில்ஸ் அவருடன் ஆங்கிலத்தில் உரையாடியிருப்பார். இப்படித்தான் அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். பிறகு அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேரும் வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங்க செய்யப்பட்டு எல்லா மாநிலங்களிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஒளிபரப்புக்கு பின்னர் இந்திய மக்களிடம் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது, இன்னும் பல அயல்நாடுகளிலும் இந்நிகழ்ச்சி பிரபளமாக பேசப்பட்டு வருகிறது. நிகழச்சி ஒளிபரப்பப்பட்ட பிறகு, ”தான் எங்கு சென்றாலும் மக்கள் கேட்கும் முதல் கேள்வி உங்கள் இந்தி மொழியை பியர் கிரில்ஸ் எப்படி புரிந்து கொண்டார் எனபதுதான்”, என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பயண்படுத்தி பியார்ல் கிரிஸ் காதில் சிறிய அளவிலான ஹியார் போன் பொருத்தி அதன் மூலம் நான் பேசிய இந்தி மொழியை அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது என தன் நிகழ்ச்சியின் ரகசியத்தை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.