சொன்ன நேரத்தில் பக்காவாக ‘காலா’வை ரிலீஸ் பண்ண “தமிழ்ராக்கர்ஸ்”! திரையுலகினர் அதிர்ச்சி!

First Published Jun 8, 2018, 3:32 PM IST
Highlights
Piracy site TamilRockers uploads Rajini Kaala


ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் காலா  வெளியான 2 மணி நேரத்தில் “தமிழ்ராக்கர்ஸ்” இணையதளத்தில் சொன்ன நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலா படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் பேச்சு எழுந்தது. ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துகளே இதற்குக் காரணம். மறுபுறம், காவிரி தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் காலாவை திரையிடக்கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இத்தகைய கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தியேட்டர்களில் ஏகப்பட்ட போலீஸாரை பாதுகாப்புக்கு குவித்து படத்தை வெளியிட்டனர்.  தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே ரசிகர் காட்சிகள் திரையிடப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டு முடிவடைவதற்குள்ளே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் காலா திரைப்படம் வெளியானது. திரைப்படம் வெளியாகி 2 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் படம் வெளியான சம்பவம்  திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக நேற்று, “காலா” முழு திரைப்படத்தையும், ரசிகர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து பேஸ்புக்கில் லைவ் செய்தார். இதைக்கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனைக்கண்டித்து பலரும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் கண்டனங்கள் செய்ய, நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் பேஸ்புக்கில் நேரலை செய்த அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.  இப்படி பேஸ்புக் நேரலை, தமிழ்ராக்கர்ஸ் இணைதள வெளியீடு என காலாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி வந்துள்ளது.

click me!