
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துகளே இதற்குக் காரணம். மறுபுறம், காவிரி தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் காலாவை திரையிடக்கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று காலா படம் வெளியானது
ரஜினிகாந்த் படம் ரிலீஸ் என்றாலே சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத் துள்ளல் இருக்கும், அதனுடைய எதிரொலி தியேட்டர்களில் டிக்கட் விற்பனையில் இருக்கும். அது காலாவுக்கு இல்லை. கபாலி முதல் நாள் அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நகரங்களில் ஓடியது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை ஆனால், ஒருவாரதிக்கான டிக்கட்டுகள் புக் ஆனது.
நகராட்சிகளிலும், பெரு நகரங்களிலும் முதல் நாள் படம் ஹவுஸ்புல் ஆகிவிடும். சென்னை, கோவை , சேலம் ஆகிய நகர்களில் உள்ள மால் தியேட்டர்களில் மட்டும் காலா படம் சிறப்புக் காட்சி, ரெகுலர் காட்சிகளில் அரங்கு நிறைந்து காணப்பட்டது. சென்னை நகரத்தில் காலா படத்திற்கு இருந்த நெருக்கடி வேறு எங்கும் இல்லை. காலா போட்டால் கல்லா கட்டிவிடலாம் என்று கனவு கண்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு காலா கனவில் மண்ணை வாரிப் போட்டது.
ரஜினி படம் ரிலீஸ் என்றால் அதிகாலை சிறப்புக் காட்சி, ரசிகர் மன்ற காட்சிகள் அவசியம் இருக்கும். சிறப்புக் காட்சி, ரசிகர் மன்ற காட்சிகளுக்கு மொத்தமாக டிக்கெட் வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த அனைவருக்கும் 40% நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை, சிறப்புக் காட்சிகளுக்குப் பின் காலா படம் திரையிட்ட புறநகர் திரையரங்குகள் அனைத்தும் வெறிச்சோடியே காணப்பட்டன. காலா படம் திரையிட்ட திரையரங்குகளில் நேற்று பிற்பகல் வசூல் நிலவரம் கேட்கத் தொடங்கியபோது, தியேட்டர் நிர்வாகிகள் சோர்வான மனநிலையில் பேசினார்கள். ஒரு வாரத்துக்கு இந்தப் படத்தை எப்படி ஓட்டி அசல் எடுப்பது என்ற ஆதங்கக் குரல்களை எல்லா இடங்களிலும் கேட்க முடிந்தது.
காலா படத்தை படைப்பு ரீதியாகப் பாராட்டியும் குறைகூறியும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தாலும் தியேட்டருக்கு காலா படம் பார்க்கக் குடும்பத்துடன் வருவதற்கு அஞ்சுகின்றனர் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என்ற பயத்தில். மொத்தத்தில் காலாவுக்கு ஓப்பனிங் இல்லை, வசூல் மந்தமாக இருக்கிறது என்கிற கேள்விக்கு பெரும்பான்மையோர் சொன்ன பதில் மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளி, கல்லுரி சேர்க்கையில் தீவிரமாக இருக்கும் நேரம் இது. இஸ்லாம் மக்கள் நோன்பு இருப்பதால் படம் பார்க்க வரமாட்டார்கள், இவற்றைக் காட்டிலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆதரித்து ரஜினி பேசிய பேச்சு தென் மாவட்டங்களில் காலா படத்தின் வசூலை காவு வாங்கிவிட்டது.
படத்தின் உண்மையான வசூல் நிலவரம், எதை நோக்கி காலா வசூல் இருக்கும் என்பதையெல்லாம் திங்கள் கிழமைதான் தீர்மானிக்க முடியும். 22 கோடி வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட காலாவின் முதல் நாள் மொத்த வசூல் சுமார் எட்டுக் கோடியே எண்பத்தி எட்டு லட்சமாம்.
தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி ஆந்திரா தெலுங்கானா ரூ. 7 கோடி,கேரளாவில் ரூ. 3 கோடி,, மற்றும் இந்தியாவில் ரூ 6 கோடி வெளிநாட்டு நாட்டிலிருந்து ரூ17 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இது உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடியாகும். இந்த மதிப்பிடப்பட்ட வசூல் மற்றும் இறுதி வசூல் மாறுபடும். என ஐபிடைம்ஸ்( ibtimes ) கூறி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.