கலக்கும் காலா திரைப்படம்….. உலக அளவில் ஒரே நாளில் வாரிக் குவித்தது எவ்வளவு தெரியுமா ?

 
Published : Jun 08, 2018, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
கலக்கும் காலா திரைப்படம்….. உலக அளவில் ஒரே நாளில் வாரிக் குவித்தது எவ்வளவு தெரியுமா ?

சுருக்கம்

kala world level collection and chennai collection

நடிகர் ரஜினிகாந்த்  நடித்த காலா திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒரே நாளில் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கிடையே நேற்று ரிலீஸ் ஆன ரஜினிகாந்தின் காலா உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூப்பர் தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.   மேலும்  காலா மிகவும்  நல்ல படம் என்ற விமர்சனங்களைப் பெற்றுள்ளதால் வரவிருக்கும் நாட்களில் அதன் கலெக்ஷன் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படம் ரிலீஸ் ஆன வர்த்தக ஆய்வாளர்களின் ஆரம்ப மதிப்பீடுகள் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி ரூபாயை ஈட்டியுள்ளன என்று  தகவல்கள் வெளியாகியுள்ளது..

தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி,ஆந்திரா தெலுங்கானா  ரூ. 7 கோடி,கேரளாவில் ரூ. 3 கோடி,, மற்றும் இந்தியாவில் ரூ 6 கோடி   வெளிநாட்டு நாட்டிலிருந்து ரூ17 கோடி ரூபாய் வரை இந்தப்படம் வசூலித்துள்ளதாக கூறியிள்ளனர்.

 இது உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடியாகும்.இந்த மதிப்பிடப்பட்ட  வசூல்  மற்றும் இறுதி வசூல்  மாறுபடும். என ஐபி டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தான் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என கூறலாம். தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் மட்டும்  1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாண்ட சாதனையை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஒருபுறம்  காலா திரைப்படத்தின் வசூல் மிக குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ரஜினிகாந்தின் காலா முதல் நாளில் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல  தொடக்கத்தை பெற தவறிவிட்டதாகவே கூறப்படுகிறது. காலா தமிழகத்தில்  650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ,அதே நேரத்தில் உலக அளவில் 2,500  திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிலம், நீர், காற்று, பணம்-எல்லாத்துக்கும் மதிப்பு கூடிக் கொண்டே போகுது: - மிரட்டலாக வெளியான ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட டீசர்!
அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ