ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே எட்டிப்பார்க்காத அஜீத்...மே 1ல் படம் ரிலீஸாகுமா?...

Published : Feb 14, 2019, 09:02 AM IST
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே எட்டிப்பார்க்காத அஜீத்...மே 1ல் படம் ரிலீஸாகுமா?...

சுருக்கம்

அஜீத்தின் அடுத்த படமான ‘பிங்க்’ ரீமேக் ஷூட்டிங் ஸ்பாட் பக்கமே அவர் எட்டிக்கூட பார்க்காத நிலையில், அவரது பிறந்தநாளான மே 1ம் தேதியன்று அறிவித்தபடி படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அஜீத்தின் அடுத்த படமான ‘பிங்க்’ ரீமேக் ஷூட்டிங் ஸ்பாட் பக்கமே அவர் எட்டிக்கூட பார்க்காத நிலையில், அவரது பிறந்தநாளான மே 1ம் தேதியன்று அறிவித்தபடி படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் அஜீத் கமிட் ஆகியிருக்கும் அடுத்த இரு படங்களில் பிங்க் படத்தின் ரீமேக்கான பெயர் சூட்டப்படாத படம் அஜீத்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே ரகசியமாகத் தொடங்கப்பட்ட நிலையில் மூன்று கதாநாயகிகள் மற்ற நடிகர்கள் காட்சிகள் மட்டும்படமாக்கப்பட்டு வரும் நிலையில் அஜீத் இன்னும் படப்பிடிப்பில் ஒருநாள் கூட கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து படப்பிடிப்பு குழுவினரை விசாரித்தபோது அஜீத்தின் கால்ஷீட் மொத்தமே 20 நாட்கள் மட்டுமே தேவைப்படுவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மார்ச் 20க்குள் அவர் போர்சனை முடித்துவிடுவார் என்றும், ஏப்ரல் முழுக்க போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்து மே1ம் தேதி படம் கண்டிப்பாக திரைக்கு வந்தே தீரும் என்றும் தெரிவிக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்