
இன்று ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய இரு படங்களுமே வெறுமனே ரஜினி, அஜீத் ரசிகர்கள் பார்க்கும் படங்களாக மட்டுமே ஆகிவிட்ட நிலையில் வசூலிலும் இரு படங்களும் ஏறத்தாழ சமநிலையில் இருப்பதாகவே தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உட்பட்ட முக்கிய நகரங்களில் விஸ்வாசம் பேட்ட ஆகிய இரு படங்களுமே அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல். ஆனால் நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் விஸ்வாசம் 90 சதவிகிதமும், பேட்ட 80 சதவிகிதமும் ஃபுல் ஆகியிருக்கிறது.
தற்போதைய நிலையில் இரண்டு படங்களையும் அந்தந்த ரசிகர்கள் ஆகா ஓஹோவென புகழ்ந்து வரும் நிலையில், விஸ்வாசத்துக்கு ஒரு 4 அடி பின்னால்தான் பேட்ட நிற்கிறது. இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது 2 மணிநேரம் 51 நிமிடங்களாக ஓடும் படத்தின் நீளம். ஆனால் அஜீத்தின் விஸ்வாசம் சரியாக 2மணிநேரம் 32 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது.
எக்ஸ்ட்ராவாய் ஓடுகிற அந்த 20 நிமிடத்தை நறுக்கிவிட்டால் விஸ்வாசம் படத்துக்கு சரிக்கு சமமாய் வந்துவிடலாம் என்று கார்த்திக் சுப்பாராஜுக்கு அவரது உதவியாளர்கள் கருத்துச் சொல்லியிருக்கும் நிலையில், அவரும் அது தொடர்பான சில காட்சிகளை முடிவு செய்துவிட்டு ரஜினியின் அனுமதிக்காக காத்திருக்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.