
‘கனா’ வெற்றி விழாவில் ‘ஓடாத படங்களுக்கெல்லாம் சக்சஸ் மீட் நடத்துகிறார்கள்’ என்று நிஜத்தைப்பேசிய நடிகை ஐஸ்வர்யாவை ‘உனக்கு அவ்வளவு வாய்க்கொழுப்பா?’ என்று ‘வடசென்னை’ தனுஷ் மிரட்டிதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக்கேட்டார்.
டிசமபர் 21 ரிலீஸ்களில் தனுஷின் ‘மாரி 2’ படமும், ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’வும் கலந்துகொண்டு தோல்வியைத் தழுவின. ஆனால் ஒரிஜினலாக வெற்றிபெற்ற ‘கனா’வை முந்திக்கொண்டு அவர்கள் இருவரும் தடபுடலாக சக்சஸ் மீட் வைத்தனர். இதை ‘கனா’ வெற்றிவிழாவில் வெளிப்படையாக சொன்னார் ஐஸ்வர்யா.
அதையொட்டி ஐஸ்வர்யாவை போனில் தொடர்புகொண்ட அவரது ‘வடசென்னை’ படக் கூட்டாளி தனுஷ்,’உன் படம் ஓடுனா அதைப்பத்தி மட்டும் பேசு. மத்த படங்களைக் கிண்டல் அடிக்கிற அளவுக்கு நீ இன்னும் வளரல. கொஞ்சம் வாய்க்கொழுப்பை அடக்கு’ என்று உரிமையாகக் கண்டித்தாராம்.
அதனால் சற்று டென்சனான ஐஸ்வர்யா நேற்று நள்ளிரவு “ஹாய்.. கனா வெற்றி விழாவில் நகைச்சுவைக்காகப் பேசினேன். எந்தத் திரைப்படத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் எப்போதும் யாரையும் புண்படுத்த மாட்டேன். அனைத்துப் படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும் எனப் பிராத்திக்கிறேன். ஒரு படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.