பவன் கல்யாணின் 'வக்கீல் சாப்' ட்ரைலரை பார்க்க கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ரசிகர்கள்!

Published : Mar 30, 2021, 08:00 PM IST
பவன் கல்யாணின் 'வக்கீல் சாப்' ட்ரைலரை பார்க்க கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ரசிகர்கள்!

சுருக்கம்

இந்த படம் ஹிந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டாப்சீ உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'பிங்க்'. இந்த படத்தின் ரீமேக்கில் தான் தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் நடித்தார். டாப்சீ வேடத்தில் ஷர்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். பெண்களின் உரிமையை பற்றி இந்த படம் பேசி இருந்தது. இந்த படம் ஹிந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். 'வக்கீல் சாப்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சில திரையரங்குகளில் வெளியான நிலையில், அதனை பார்க்க பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும், அவரது  ஜன சேனா கட்சி தொண்டர்கள் பலர் முண்டியடித்து கொண்டு, திரையரங்குகளின் கண்ணாடியை உடைத்து கொண்டும் உள்ளே சென்றது பார்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்தது.

விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கில் கூடிய பவன் கல்யாணின் ரசிகர்கள், தான் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிட்டு டிரைலரை காண முண்டியடித்த காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த சில வீடியோக்களும், சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் 'வக்கீல் சாப்' டிரைலர் வெளியான 7 நிமிடத்தில் 100k லைக்குகளைப் பெற்று சாதனை படைத்தது. மேலும் 24 மணிநேரத்தில் 21  மில்லியன்  ரசிகர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ட்ரைலரை லைக் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்