
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கிடைத்துள்ள மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருதுக்காக, இன்று காலை முதலே பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும், அறிக்கை வெளியிட்டும், வீடியோ மூலமாகவும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஜினிகாந்த், பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, என்னை வாழ வைத்த தெய்வங்களான, தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகப் பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார், பவன் கல்யாண் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "தாதாசாகேப் பால்கே விருதைப் பெறும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறந்த நடிகர்களுக்கான தாதாசாகேப் பால்கே விருதை திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது சார்பாகவும், ஜனசேன சார்பாகவும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 45 வருடங்களாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த திரு.ரஜினிகாந்த் அவர்கள், இந்த விருதுக்கு அனைத்து வகையிலும் தகுதியானவர். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். அவர் எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மூத்த சகோதரர் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த 'பந்திபோட்டு சிம்ஹாம்' மற்றும் 'காளி' படங்கள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன. திரு.ரஜினிகாந்த் அவர்கள் மேலும் நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று நம்புகிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.