
பிரபல முன்னணி நடிகர் பவன் கல்யாண், கொரோனா பாதிப்பிற்காக தெலுங்கானா மற்றும் ஆந்திர அரசுக்கு ரூபாய் ஒரு கோடி நிதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தல அஜித் நடித்த 'பிங்க்' படத்தின் தெலுங்கு பட ரீமேக்கில் தற்போது அஜித் நடித்த வேடத்தில் நடித்து வருபவர் பவன் கல்யாண். இந்த படத்தை இயக்க ஸ்ரீராம் வேணு இயக்க, தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
தீவிரமாக நடந்து வந்த இந்த படத்தின் பணிகள், தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, மற்றும் ஆண்ரியா தரங் நடித்த வேடத்தில், நிவேதா தாமஸ், அனன்யா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் பவன் கல்யாண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொரோனா அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு 50 லட்சம் வீதம்... அரசுக்கு ஒரு கோடி நிதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.