டீச்சர்... நீங்க கலக்குங்க...! - சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்! ரசிகர்களின் வாழ்த்து மழையில் 'தளபதி-64' நடிகை!

Published : Nov 15, 2019, 10:17 PM IST
டீச்சர்... நீங்க கலக்குங்க...! - சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்! ரசிகர்களின் வாழ்த்து மழையில் 'தளபதி-64' நடிகை!

சுருக்கம்

ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு  ரசிகர்களையுமே காதல் மயக்கத்தில் கிறங்கடித்த மலையாளப் படம் 'பிரேமம்'. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின்பாலி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில், கடந்த 2015ம் ஆண்டு வெளியான இந்தப் படம், இளைஞர்கள் மத்தியில் தாறுமாறாக வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்தது. 

பிரேமம் படத்தில் சாய்பல்லவி ஏற்று நடித்த மலர் டீச்சரை, ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அவரது உண்மை பெயரே மறந்து போகும் அளவுக்கு மலர் டீச்சர்... மலர் டீச்சர் என சாய்பல்லவியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது, பிரேமம் மலர் டீச்சரையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு பவி டீச்சர் கொண்டாடப்பட்டு வருகிறார். 

கடந்த சில வாரங்களாக யூ-டியூப்பில் ஒளிபரப்பாகிவரும் வெப்சீரிஸ்தான் 'ஆஹா கல்யாணம்'. இந்த சீரிஸில், பவி டீச்சராக நடிக்கும் பிரிகிதாதான், இன்றைய இளைஞர்களின் தூக்கத்தை கலைக்கும் அழகான ராட்சஷியாகியுள்ளார்.அந்த அளவுக்கு, இளைஞர்களை தனது வசீகரத்தில் வசியம் செய்துள்ள பவி டீச்சர், தமிழ் திரையுலகினரையும் விட்டுவைக்கவில்லை. 

அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'பவி டீச்சர்' பிரிகிதாவை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆமாங்க, முதல்முறையாக தளபதி விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் 'தளபதி-64'. இந்தப் படத்தில்தான் ஒரு முக்கிய கேரக்டரில் 'பவி டீச்சர்' பிரிகிதா நடிக்கிறார். 

'தளபதி-64' படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு, கடந்த 3 வாரங்களாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய், ஹீரோயின் மாளவிகா மோகனன் மற்றும் '96' புகழ் கவுரி கிஷான், வி.ஜே. ரம்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் பிரிகிதாவும் இணைந்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் கல்லூரி காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. 

'தளபதி 64' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள்தான் தற்போது சமூகதலைதளத்தையே கலக்கு கலக்கு என கலக்கி வருகிறது. தளபதி-64 படக்குழுவுடன் பவி டீச்சர் இருக்கும் புகைப்படங்களை பார்த்து லைக்ஸை அள்ளி வீசிவரும் ரசிகர்கள், பிரிகிதாவுக்கு வாழ்த்து்ககளை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!
அக்கா என்று கூட பார்க்கலயே: பாதகத்தி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் போட்டுக் கொடுத்த சந்திரகலா!