
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் அமீர் அவர்கள் பேச அவருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி, கரு. பழனியப்பன், இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் இயக்குனர் சேரன் உள்ளிட்ட பலர் தங்கள் சார்பில் அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்து நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஞானவேல்.
அதில் தனது கருத்து இயக்குனர் அமீர் அவர்களை புண்படுத்தும் வகையில் இருந்திருந்தால் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அவர் மன்னிப்பு கேட்ட பிறகு இந்த சர்ச்சை சற்று ஓய்ந்து இருந்தாலும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி பொதுவெளியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஒரு போஸ்டரால் இந்த பிரச்சனை இன்னும் பெரிதாக உருவெடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும். காரணம் சூர்யாவுடைய ரசிகர்கள் சிலர் அடித்த போஸ்டர் ஒன்று தற்பொழுது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அடித்துள்ள அந்த போஸ்டரில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது..
"நன்றி கெட்ட துரோகி இயக்குனர் அமீரையும், அமீரின் அல்லக்கைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம். கருங்காலி பழனியப்பனுக்கு நாவடக்கம் தேவை.. சிங்கம் அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா?" என்று அந்த போஸ்டரில் அவர்கள் எழுதியுள்ளனர். பருத்திவீரன் பட பிரச்சனை வெகு சுலபமாக தீர்ந்துவிடும் என்று நினைத்த நிலையில் தற்போது இந்த போஸ்டர் பலருடைய உணர்ச்சிகளின் தூண்டும் வகையில் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.