'பொன்னியின் செல்வன்' தான் இரவின் நிழல் ஓடிடியில் வெளியாகததற்கு காரணமா? குழம்ப வைத்த பார்த்திபனின் பதிவு!

By manimegalai a  |  First Published Nov 4, 2022, 7:19 PM IST

பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், 'இரவின் நிழல்' திரைப்படம் ஓடிடி ரிலீஸ் குறித்து போட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
 


தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளை இயக்காமல், ஒவ்வொரு படத்திற்கும் ஏதேனும் வித்தியாசத்தை புகுத்தி இயக்கியும், தயாரித்தும், வருபவர் நடிகரும், இயக்குனருமான, பார்த்திபன். அந்த வகையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் ஒட்டு மொத்த திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்திய படமாக அமைந்தது மட்டும் இன்றி, தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. ஒரே ஒருவர் மட்டுமே இந்த படம் முழுக்க நடித்திருந்தாலும், அந்த கதையை நேர்த்தியாக இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தை தொடர்ந்து,  பாலிவுட்டிலும் இந்த படத்தை நடிகர் அபிஷேக் பச்சனை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார்.

Tap to resize

Latest Videos

விஜயகாந்த் பட கதையை திருடி... ஷாருக்கானுக்கு பட்டி டிங்கரிங் பார்த்த அட்லீ! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

இந்தப் படத்தை தொடர்ந்து, உலகிலேயே முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான 'இரவின் நிழல்' படத்தை இயக்கி,  நடித்திருந்தார். இந்த படத்தில்  யூடியூப் பிரபலமான பிரிகிடா, நடிகை வரலட்சுமி சரத்குமார் ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடித்திருந்தனர். கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை ஓடிடி  தளத்தில் வெளியாகாமல் உள்ளது.

Yashoda Movie: சமந்தாவின் 'யசோதா' திரைப்படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!

ஏற்கனவே 'இரவின் நிழல்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிற தகவலை நடிகர் பார்த்திபன் தெரிவித்திருந்த நிலையில், படம் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. பின்னர் இதற்காக பார்த்திபன் மன்னிப்பும் கேட்டிருந்தார். இதை தொடர்ந்து தற்போது இவர் போட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களை குழம்பும் விதத்தில் உள்ளது. "அமேசானில் இன்று முதல்’பொன்னியின் செல்வன்’எனவே,வரும் வாரம் வருமாம் ‘இரவின் நிழல்’-செய்தி பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை! பெருங்கொடை!குடையாக விரியும் அரசின் உதவிகள்,அடுத்த சீசனில் மழைக்கும்முன் இடும் கூடுதல் திட்டமிடலால்  மக்கள் நலம் கூடும். மழைசாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம்  இந்நாளை! இந்த கூறியுள்ளார்.

Bipasha Basu: 43 வயதில் நிறைமாத வயிற்றை காட்டியபடி புகைப்படம் வெளியிட்டு.. விஜய் பட நடிகை போட்ட சூப்பர் பதிவு!

அதாவது இந்த வாரம் அமேசான் பிரைம் தளத்தில் 'பொன்னியின் செல்வன் 1' திரை திரைப்படம் வெளியானதன் காரணமாகவே, 'இரவில் நிழல்' படம் வெளியாகவில்லை என்பது போல் தெரிவித்துள்ளார். மேலும் மழை காலம் துவங்கி விட்டதால்... தேவை உள்ளவர்களுக்கு உதவுகங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!