"கலைஞர் 100".. முதல் ஆளாக வந்த வைகை புயல் - மீண்டும் இணையுமா அந்த காமெடி காம்போ? பார்த்திபன் ட்வீட் வைரல்!

Ansgar R |  
Published : Jan 07, 2024, 05:44 PM IST
"கலைஞர் 100".. முதல் ஆளாக வந்த வைகை புயல் - மீண்டும் இணையுமா அந்த காமெடி காம்போ? பார்த்திபன் ட்வீட் வைரல்!

சுருக்கம்

Vadivelu in Kalaingar 100 : நேற்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ் திரை உலகை சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில் நடிகர் வடிவேலு அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இறுதி பல சிறந்த நடிகர்களின் இறப்பை சுமந்து நிற்கும் ஒரு ஆண்டாக மாறியது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மரணம் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. அவருடைய மரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன், தளபதி விஜய் மாற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிவரை ஒரு அறிவிப்பு கூட வெளியிடாமல் இன்றளவும் மௌனம் காத்து வருகிறார் நடிகர் வடிவேலு. 

இதனால் இனையவாசிகள் பலரும் அவர் மீது தங்களுக்குள்ள கோபத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெகுநாட்கள் கழித்து வெளியே வந்திருக்கும் நடிகர் வடிவேலு அவர்கள், நேற்று சென்னை கிண்டியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அஜித்தின் விடாமுயற்சி.. அதில் நடிக்க தன்னை மகிழ் திருமேனி அழைக்காதது ஏன்? - உண்மையை சொன்ன "மிஷன் நாயகன்"!

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், ஒரு நல்ல விஷயத்திற்கு வரவில்லை என்றாலும், ஒருவருடைய இறப்பிற்கு அவர் வராதது பெரும் மன வேதனையை அளிப்பதாக விஜயகாந்த் அவர்களுடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, நடிகர் வடிவேலு அவர்கள் நேற்று முதல் ஆளாக கலைஞர் 100 விழாவில் பங்கேற்றார். 

இதுஒருபுரம் இருக்க நேற்று கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் நமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா பார்த்திபன் மற்றும் வடிவேலு அவர்களுடைய காமெடி காம்போவிற்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. 

இந்நிலையில் நேற்று பார்த்திபன் வெளியிட்ட பதிவில், "வடிவேலுவும், தானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும். அது எப்போது அமையும் என்பதை அவர் பாணியில் குழப்பமான ஒரு பதிவோடு கூறியிருந்தார் நடிகர் பார்த்திபன்.

தூண்டி விட்ட ஜோதிகா.. அப்பா சிவகுமார் பேச்சை மதிக்காமல் சூர்யா செய்த விஷயம்! கடும் கோபத்தில் குடும்பத்தினர்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

காசு வெட்டி போட்டு திருமணத்தை முறித்து கொண்ட கார்த்திக் ரேவதி
பாதிக்கப்பட்டவருக்கு நீதி முழுமையாக கிடைக்கவில்லை... நடிகை கடத்தல் வழக்கு தீர்ப்புக்கு மஞ்சு வாரியர் பதிலடி