அக்காவிடம் கலைஞர் மாதிரி வைத்து விடுங்கள் என சொல்லி அடம்பிடிப்பேன்! கலைஞர் 100 விழாவில் கமல் பகிர்ந்த தகவல்!

Published : Jan 07, 2024, 09:15 AM IST
அக்காவிடம் கலைஞர் மாதிரி வைத்து விடுங்கள் என சொல்லி அடம்பிடிப்பேன்! கலைஞர் 100 விழாவில் கமல் பகிர்ந்த தகவல்!

சுருக்கம்

கலைஞர் 100 விழாவில், சிறு வயதிலேயே கலைஞரால் கவரப்பட்டு அவரை போல் ஹேர் ஸ்டைல் வைத்து விடுமாறு தன்னுடைய அக்காவிடம் கேட்பேன் என கமலஹாசன் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.  

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் நேற்று 'கலைஞர் 100' விழா சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் திரைப்பட துறையைச் சேர்ந்த, நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

'கலைஞர் 100' விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு மாதமாக அழைப்பிதழ் வைக்கப்பட்டு வந்தது. மேலும் நேற்று நடந்த இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், கார்த்தி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஜா, வடிவேலு, ஆர் ஜி பாலாஜி, உள்ளிட்ட ஏராளமான நடிகர் - நடிகைகள் கலந்து கொண்டனர். அதே போல் லோகேஷ் கனகராஜ், தங்கர்பச்சான், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர், வெற்றிமாறன், போன்ற இயக்குனர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை பூர்ணிமா.. உடனே சிம்பு செய்த பேருதவி - வெளியான அசத்தல் அப்டேட் இதோ!

இந்த விழாவில் பேசிய உலக நாயகன் கமலஹாசன், எந்த அளவுக்கு தன்னுடைய சிறு வயதில் இருந்தே கலைஞரால் ஈர்க்கப்பட்டேன் என்கிற சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். எடுத்ததுமே ஒரு ஓரமாக நின்று நான் ஏன் பேசுகிறேன் என நினைக்கிறீர்களா? என்கிற கேள்வியை எழுப்பி... நான் எப்போதுமே கலைஞரின் மேடையில் ஓரமாகத்தான் இருப்பேன் என தன்னுடைய பேச்சை துவங்கினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோர் தன்னுடைய தமிழ் ஆசான்கள் என கூறினார். கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும், என்கிற மூன்றும் எப்போதும் பிடிக்க முடியாத ஒன்று என்றும்... பாடல்களின் பிடியில் இருந்த சினிமாவை, வசனம் மூலம் வசப்படுத்தியவர் கலைஞர், என்றும் எம்ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இரு ஆளுமைகளை தன் எழுத்தால் உச்ச நட்சத்திரம் ஆக்கியவர் கலைஞர் என கூறினார். 

மாட்டிக்கிட்ட பங்கு... சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பியா? தீயாய் பரவும் தகவல்

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுடன் உரையாட வேண்டும் என்று அவரிடம் கற்று கொண்டு தான், பிக்பாஸ் மூலம் மக்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.மேலும்  கலைஞர் தன்னை கலை உலகின் பிரதிநிதியாகவே காட்டிக் கொள்ள விரும்பினார். அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டத்தை என்றும் மறக்க மாட்டேன். அவரை தொடர்ந்து அவரின் மகன் முதல்வராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஊர்வலத்தில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசியல் பண்பு பேச பட வேண்டியது. இந்த பண்பு கலைஞரிடம் இருந்து தான் அவருக்கு வந்துள்ளது என்கிறார். சிறுவயதில் தன்னுடைய அக்காவிடம் கலைஞர் மாதிரி ஹேர் ஸ்டைல் வைத்து விடுங்கள் என கூறி அடம்பிடிப்பேன் என சுவாரஸ்ய தகவல் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?