
சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்கேற்றபோதும் பெரிய அளவில் மக்கள் கூடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் நிகழ்ச்சிக்கு வருகைதரவில்லை.
அதே நேரத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கருணாஸ், வடிவேலு மற்றும் நடிகைகள் ஜெயசுதா, கவுதமி, ரோஜா, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
"வாங்க மன்மதராசா" என்றழைத்த கருணாநிதி - கலைஞர் 100 விழாவில் நெகிழ்ந்து பேசிய "கேப்டன் மில்லர்"!
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், கலைஞர் கருணாநிதி தன்னை மன்மத ராசா வாங்க என்று அழைத்ததை நினைவுகூர்ந்து பேசினார். மேலும் அவரை தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா அவர்களும் கலைஞர் கருணாநிதி குறித்த பல நினைவுகளை மேடையில் பகிர்ந்துகொண்டார். அவரை தொடர்ந்து பேசிய உலக நாயகன் கமல்ஹாசன், கலைஞருடனான தனது பயணம் குறித்து பேசினார்.
இறுதியில் மேடையில் ஏறி பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். "சிலர் தங்களுடைய அறிவை பறைசாற்றுவதற்காக பேசுவார்கள், ஆனால் அது மற்றவர்களுக்கு புரியுமா? புரியாதா? என்று யோசிக்க மாட்டார்கள். ஆனால் கலைஞர் அப்படி அல்ல.. அவர் அறிஞர் சபையில் பேசும்போது அறிஞராகவும், கவிஞர் சபையில் பேசும் பொழுது கவிஞராகவும், பாமரர்களிடம் பேசும் பொழுது பாமரராகவும் பேசுவார் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.