ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டை போட்ட பார்த்திபன்.!! அடுத்த தலைவர் என அடையாளம் காட்டிய நெகிழ்ச்சியான சம்பவம்...

By Maruthu Pandi SanthosamFirst Published Aug 25, 2018, 8:20 PM IST
Highlights

எழுந்தால் விட்டம் தொடுவார், எழுத்தால் விண்ணை தொடுவார். என்று கலைஞரின் எழுத்து புகழ் குறித்து பேச ஆரம்பித்த பார்த்திபன் தமிழ் எனக்கு உயிர் போன்றது, அவர் இறந்ததால் தமிழுக்கே உயிர் போனது. என்றார்.

கலைஞர் புகழுக்கு வணக்கம் செலுத்துவதற்காக திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து கோவையில் "மறக்கமுடியுமா கலைஞரை" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் பார்த்திபன் அவருடைய தோரணையில் புகழாரம் செலுத்தினார்.

கலைஞருக்கு சூரிய வணக்கம் என்று தான் தன்னுடைய உரையையே தொடங்கினார் நடிகர் பார்த்திபன், சூரியனுக்கு நிகரான அறிவாற்றல் மிக்க கலைஞர். அதனால் தான் நான் சூரிய வணக்கம் என்று கூறினேன் என்று பார்த்திபன் அவருடைய தோரணையில் தன்னுடைய உரையை தொடர்ந்தார். மேலும்,

எழுந்தால் விட்டம் தொடுவார், எழுத்தால் விண்ணை தொடுவார். என்று கலைஞரின் எழுத்து புகழ் குறித்து பேச ஆரம்பித்த பார்த்திபன் தமிழ் எனக்கு உயிர் போன்றது, அவர் இறந்ததால் தமிழுக்கே உயிர் போனது. என்றார். அதன் பிறகு அங்கு கூடியிருந்த கலைஞரின் உடன்பிறப்புகளை நோக்கி, நீங்கள் அனைவரும் உடன்பிறகுகள் அல்ல, உயிர் பிறப்புகள். அவருடைய இறப்பின் பொழுது அனைவரது முகத்திலும் உண்மையான சோகத்தினை கண்டேன். சொந்தக்காரனுக்கே வராத சோகம் அவருடைய இறப்பில் வந்தது என்பதை அன்று தான் உணர்ந்தேன். கைல காசு இல்லனா சொந்த உடம்பே நம்ம சொல்ல கேக்காது. உலகில் எந்த தலைவருக்கும் கிடைக்காத தொண்டர் கூட்டம் கலைஞருக்கு மட்டுமே உள்ளது என்று அவருடைய புகழ் குறித்து பேசினார் பார்த்திபன்.

கலைஞருக்கு பிறகு, அவர் அவருடைய உடன்பிறப்புகளுக்கு சரியான கலங்கரை விளக்கத்தை அடையாளம் காட்டிவிட்டு தான் சென்றுள்ளார். அந்த கலங்கரை விளக்கம் வேறு யாருமில்லை நம் செயல் தலைவர் ஸ்டாலின் தான். அவருக்கு பிறகு தமிழகத்தின் கலங்கரை விளக்கமாக ஸ்டாலின் நிச்சயம் இருப்பார் என்று கூறிய பார்த்திபன் தலைவர் கலைஞர் இறந்த பிறகு எப்பொழுதும் சோகமாகவே காணப்படும் செயல் தலைவருக்கு நான் ஒரு டானிக் தரப்போகிறேன் என்று கூறி, அவரை மேடைக்கு அழைத்து கலைஞரின் அடையாளமான மஞ்சள் துண்டை ஸ்டாலின் மீது பார்த்திபன் அணிவித்தார். அதன் பிறகு பேசிய பார்த்திபன்,

நான் கோடி வார்த்தை பேசுவதற்கு பதிலாக அந்த தூண்டு பல விஷயங்களை உங்களுக்கு சொல்லும். அதனால் தான் அந்த மஞ்சள் துண்டை அவருக்கு அணிவித்தேன். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற மொழிக்கு பொருத்தமானவர் செயல் தலைவர்.

எந்த கரை வெட்டியும் அணியாத நான் கலைஞர் பற்றி பேசுவது அரசியல் லாபம் அற்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்காக கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்
செய்த  பிரார்த்தனை அவருக்கு மட்டும் தான் கிடைக்கும். இனி யாருக்கும் கிடைக்கபோவதும் இல்லை. அவர் காவேரி மருத்துவமனையில் இருந்தபோது தினந்தோறும் அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டது. அவருக்கு மருந்துகள் கொடுத்ததற்கு பதிலாக  கையில் ஒரு பேனா கொடுத்திருந்தால் செஞ்சுரி அடித்திருப்பர் தலைவர் கலைஞர் கருணாநிதி.

உடன்பிறப்புகள், உடன்பிறப்புகள் என பல கடிதங்களை கலைஞர் உங்களுக்காக எழுதியுள்ளார். அவருக்கு பிறகு உங்களை தான் நான் கலைஞராக தான் பார்க்கிறேன்.  என்று கூறி பார்த்திபன் தன்னுடைய முடித்தார்.

click me!