நான் பொண்ணா இருந்தா கலைஞரை கல்யாணம் பண்ணியிருப்பேன்! தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன்பாபு கிளுகிளு...

Published : Aug 25, 2018, 07:11 PM ISTUpdated : Sep 09, 2018, 07:33 PM IST
நான் பொண்ணா இருந்தா கலைஞரை கல்யாணம் பண்ணியிருப்பேன்! தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன்பாபு கிளுகிளு...

சுருக்கம்

நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் கருணாநிதியை கல்யாணம் பண்ணியிருப்பேன் என தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபு கிளுகிளுப்பாக பேசினார்.

மறைந்த முன்னால் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி புகழுக்கு வணக்கம் செலுத்துவதற்காக திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து கோவையில் "மறக்கமுடியுமா கலைஞரை" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் ராதாரவி புகழாரம் செலுத்தினார்.   இதில் திரையுலகை சேர்ந்த நடிகர் ராதரவி, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ராதிகா, சிவகுமார், பாரதிராஜா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில்  திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், மற்றும் பல திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியயை சிறப்பித்து வருகின்றனர்.

இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய தெலுங்கு நடிகர் மோகன் பாபு கலைஞர் கருணாநிதியை புகழ்ந்து பேசினார்.

அப்போது பேசிய அவர்;   கருணாநிதியைப் பற்றிப் பெசவந்திருக்கும் நான் அவரை நான்கு முறை சந்தித்திருக்கிறேன், முதன் முதலாக  ஏன் டி ராமாராவ் கல்யாணத்தில் சந்தித்தேன். அடுத்ததாக 100 வது நாள் விழாவிற்கு  தலை தாங்கி நடத்தும் நிகழ்ச்சியில் சந்தித்தேன். பிறகு சினிமா விழாக்களில் சந்தித்தேன். அப்போது கடைசியாக சந்தித்த சினிமா அசோசியேஷன் விழாவில் மேடையில் பார்த்த நான் கலைஞர் கருணாநிதியுடன் நீங்க எவ்வளவு அழகாக இருக்கிறீங்க சார், நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் நானே உங்களை கல்யாணம் செய்திருப்பேன் அப்படி ஒரு கிரேட் மேன் கருணாநிதி என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், என்னைப்போன்ற மற்ற மாநிலத்தவருக்கும் மரியாதையை ஏற்படுத்தி கொடுத்தவர், கருணாநிதி சார் உங்களுக்கு நன்றி,அதிலும் நான் திரை துறையை சேர்ந்தவன் என்பதால் அந்த நன்றியை நான் மறக்க முடியுமா நடிக்க முடியுமா? என புகழ்ந்து பேசினார்.

கருணாநிதியின் பெயருக்கான ஒரு அர்த்தம் சொன்னபோது அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. மு.கருணாநிதிக்கு  மு என்றால் முன்  உதாரணம்... க - என்றால் கருணை... ரு - என்றால் ருத்ரம்.. ணா - என்றால் நாஸ்திகம்.. நி - என்றால் நிதானம்.. தி என்றால் திராவிடம்... அதுதான் தி  கிரேட் மேன் கருணாநிதி என ஆந்திராவைச் சேர்ந்த மோகன்பாபு தமிழ் தலைவரை புகழ்ந்தது திமுகவினரை நெகிழ வைத்தது.

மேலும் பேசிய அவர், அறிஞர் அண்ணாவின் வழி நடந்தால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என கடைசி வரை கட்டுக் கோப்பாக 50 ஆண்டு  கட்டி காத்தவர். மறைந்த அண்ணாவின் மனதில் இருந்தவனர் இப்போது அண்ணாவுடன் மயானத்திலும் இருக்கிறார் என கலைஞரை புகழ்ந்து தள்ளினார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
வாய்ப்பில்ல ராஜா... குணசேகரன் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட சாமியாடி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்