Parthiban: ஹேக்கர்கள் கைவரிசை.... நடிகர் பார்த்திபனின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

manimegalai a   | Asianet News
Published : Nov 21, 2021, 04:21 PM IST
Parthiban: ஹேக்கர்கள் கைவரிசை.... நடிகர் பார்த்திபனின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

சுருக்கம்

நடிகர் பார்த்திபனின் பேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளது. இதனை டுவிட்டர் பதிவு மூலம் அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் மட்டுமே இயக்கி, தயாரித்து, நடித்த "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.  ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. 

இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது, அதே போல்...  சிறந்த படமாக தேசிய விருதையும் பெற்றது. தற்போது இயக்குனர் பார்த்திபன், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அபிஷேக் பச்சன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதுதவிர இரவின் நிழல் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் பார்த்திபன். இப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு சினிமாவில் பல்வேறு புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் அவர் தனக்கே உண்டான பாணியில் நக்கல் நையாண்டியுடன் பதிவுகளை போடுவார். 

இந்நிலையில், நடிகர் பார்த்திபனின் பேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளது. இதனை டுவிட்டர் பதிவு மூலம் அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது: “Hhaappppyy Sunday, என் FB hack செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம், ஆனால் அறிவுக்கே பிறந்த சில sweet enemies Hack செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!