karthikeya Wedding: ‘வலிமை’ வில்லனுக்கு டும்டும்டும்... நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்

manimegalai a   | Asianet News
Published : Nov 21, 2021, 03:00 PM IST
karthikeya Wedding: ‘வலிமை’ வில்லனுக்கு டும்டும்டும்... நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்

சுருக்கம்

நடிகர் கார்த்திகேயா, கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்தே லோகிதா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார். தற்போது 11 வருடம் கழித்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். 

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஆர்.எக்ஸ்.100 ' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திகேயா கும்மகொண்டா.  பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வரும் கார்த்திகேயா, தற்போது அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் மூலம் டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படத்தில் அவர் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

நடிகர் கார்த்திகேயா, கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்தே லோகிதா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார். தற்போது 11 வருடம் கழித்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். 

இந்த திருமணத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி மற்றும் தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதுதவிர சமூக வலைதளங்களிலும் நடிகர் கார்த்திகேயாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!