நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நடிகர் அக்ஷய்குமார் போட்டியா? அவே கொடுத்த விளக்கம்!

By manimegalai aFirst Published Mar 20, 2019, 3:15 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் நடிகைகள் பலர் போட்டியிட உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர். 
 

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் நடிகைகள் பலர் போட்டியிட உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர். 

பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் நடிகர்களுக்கு வலைவிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடுகள் மற்றும் வேட்பாளர் தேர்வுகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் 2 . 0 படத்தில் வில்லனாக நடித்த பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார், பாஜக சார்பில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்ஷய் குமாரும் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காட்டு தீ போல் பரவிய, இந்த தகவலுக்கு அக்ஷய்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக தகவல் பரவியுள்ளது. அரசியலில் ஈடுபடுவது எனது நோக்கம் இல்லை. நான் இப்போது சினிமாவில் என்ன செய்து கொண்டிருக்கிறானோ அதையெல்லாம் அரசியலில் என்னால் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதன் மூலம் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை என்பதை அக்ஷய்குமார் வெளிப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. 

click me!