வீடு புகுந்து அடிதடியில் இறங்கிய ஜோதிகா பட இயக்குனர்! ஆப்பு வைத்த தயாரிப்பாளர் சங்கம்!

By manimegalai aFirst Published Mar 20, 2019, 2:09 PM IST
Highlights

மலையாள திரையுலகில், முன்னணி இயக்குனராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூ. 'காயங்குளம்',  'மும்பை போலீஸ்', 'உதயநானுதாரம்' உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
 

மலையாள திரையுலகில், முன்னணி இயக்குனராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூ. 'காயங்குளம்',  'மும்பை போலீஸ்', 'உதயநானுதாரம்' உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் மஞ்சுவாரியரை வைத்து இவர் இயக்கிய' ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால், அதை தமிழில் ஜோதிகாவை வைத்து  '36 வயதினிலே' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தை இவரே இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ரோஷன் ஆண்ட்ரூஸ் அடிதடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். நள்ளிரவில் அடியாட்களுடன் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி வீட்டுக்கு சென்று, அவரை தாக்கியதாக எர்ணாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆல்வின் ஆண்டனியின் மகன், ஜான் ஆண்டனி கூறும்போது... ரோஷன் ஆண்ட்ரூஸ் 40 அடியாட்களுடன் வீட்டுக்குள் புகுந்து எங்களை தாக்கினார். எனது தாயை கீழே தள்ளினார். ரோஷன் ஆண்ட்ரூஸ் தோழி ஒருவருடன் நான் பழகியது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் வீடு புகுந்து தாக்கி உள்ளார் என்றார்.

இதனை மறுத்த ரோஷன் ஆண்ட்ரூஸ், என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜான் ஆண்டனிக்கு போதைப் பழக்கம் இருந்தது. இதனால் அவரை நீக்கினேன். அதன் பிறகு என்னைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பினார். இதை தட்டி கேட்க சென்ற போது என்னையும் எனது நண்பர்களையும் ஜான் ஆன்டனி, அவரது தந்தை மற்றும்  கூட்டாளிகள் சேர்ந்து தாக்கினர் என்று கூறினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரோஷன் ஆண்ட்ரூஸ் படங்களில் பணியாற்ற மலையாள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

click me!