பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் மரணம் - திரையுலகினர் இரங்கல்

By vinoth kumar  |  First Published Feb 3, 2023, 9:40 AM IST

தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் 2018-ஆம் ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். 


பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் 2018-ஆம் ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இந்த படத்தில் கதாநாயகனின் தந்தையாக வித்தியாசமாக நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார். இந்த படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்றது. இந்த படத்தை பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்திய படம் என்று ட்வீட் செய்து திரைப்பட குழுவிற்கு பாராட்டி இருந்தார். 

Tap to resize

Latest Videos

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் ஏழ்மை நிலையில் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு சமீபத்தில் வீடுக்கட்டி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

click me!