இயக்குனரும் எழுத்தாளருமான, ஷண்முகப்பிரியன், உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
தன்னுடைய சிறு வயத்திலே, சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதுவதன் மூலம் ஒரு எழுத்தாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் இயக்குனராக மாறியவர் ஷண்முகப்ரியன்.
குறிப்பாக ஷண்முகப்பிரியன் எழுதிய “விளிம்பு” எனும் நாடகமே அவர் இயக்கத்தில் “உறவாடும் நெஞ்சம்”என்ற திரைப்படமாக 1976ல் உருப்பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் சிறந்த நடிகருக்காக மாநில விருது பெற்றார்.
அதே போல் இயக்குனர் ஷண்முகப்பிரியன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி முதல் முதலில் இயக்கிய “ஒருவர் வாழும் ஆலயம்” எனும் திரைப்படம், 1980ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதது. திரைப்படங்கள் இயக்குவதை தாண்டி, வெற்றிவிழா, பிரம்மா, ஆத்மா போன்ற 50க்கும் மேற்பட்டத் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ஷண்முகப்ரியன்.'ஒருவர் வாழும் ஆலயம்' படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
சகுந்தலம் படத்திற்காக 30 கிலோ புடவை... 3 கோடி நகைகளை அணிந்து நடித்தாரா சமந்தா? ஆச்சர்ய புகைப்படம்!
71 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று காலமானார். இவரின் மறைவை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
தளபதி 67 படத்தின் டைட்டில் எப்போது? படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!