
திரைத்துறையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம்தான். அது போல தமிழ் திரையுலகில் பல உதாரணங்களை கூற முடியும். அந்த வரிசையில் தற்போது ‘பாண்டவர் இல்லம்’ தொடரில் மல்லிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலமான ஆர்த்தி சுபாஷ், மற்றொரு சீரியல் ஹீரோவை காதலிக்கும் தகவலை பகிர்ந்து உள்ளார். யூடியூபில் வெப் தொடரில் நடித்து வந்த ஆர்த்திக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாண்டவர் இல்லம்’ தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மல்லிகா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை ஆர்த்தி உருவாக்கிக் கொண்டார். ‘பாண்டவர் இல்லம்’ தொடர் முடிவுக்கு வந்த பின்னர் ஆர்த்திக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்த தொடரும் குறைந்த எபிசோடுகளிலேயே முடிவு பெற்றது. தொடர்ந்து விஜய் டிவியில் ‘சிந்து பைரவி’ என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்த்தி நடித்து வருகிறார்.
‘சிந்து பைரவி’ தொடரில் ஆரம்பத்தில் பைரவியாக நடிகை ரவீனா தாஹா ஒப்பந்தமான நிலையில், அவர் திடீரென சீரியலில் இருந்து விலக, அந்த ரோலில் பைரவியாக நடிக்க ஆர்த்தி சுபாஷ் கமிட்டானார். நாடகங்களில் மட்டுமல்லாமல் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் ஆர்த்தி நடித்து வருகிறார். மாடலாகவும் இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, தனது காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் பவன் ரவீந்திரவை தான் ஆர்த்தி காதலித்து வருகிறார்.
இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை ஆர்த்தி பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகர் பவன் ரவீந்திரரின் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ஆர்த்தி கூறியுள்ளார். இருவரும் காதலை உறுதி செய்யும் வகையில் ஹார்டின் சிம்பளையும் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவிற்கு கீழே பிரபல நடிகர்களும் நடிகைகளும் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சின்னத்திரையில் அடுத்த ரியல் ஜோடி ரெடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.