என் தந்தை ஒரு உளவாளி : ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜாக்கி சான்

Published : Jun 04, 2025, 02:34 PM IST
Jackie Chan (Image Source: Instagram)

சுருக்கம்

தன் தந்தை ஒரு உளவாளி என்றும் தனது உண்மையான பெயர் சான் இல்லை எனவும் ஜாக்கி சான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Jackie Chan Father Spy : உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான் தனது தந்தை ஒரு உளவாளி என்று கூறியுள்ளார். அவரது சண்டைக் காட்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அவரது படங்களை ஆர்வத்துடன் பார்க்கின்றனர். இந்த நிலையில் தனது தந்தை ஒரு உளவாளி என்று ஜாக்கி சான் உறுதிப்படுத்தியுள்ளார். தனது பெயரான 'சான்' உண்மையான பெயர் அல்ல என்றும் அவர் கூறினார். அமெரிக்க பத்திரிகையான பீப்பிள் மேகஸினுக்கு அளித்த பேட்டியில் இதை அவர் கூறி உள்ளார். தனது 40 வயதில் தான் தந்தையின் இந்த ரகசியத்தை அறிந்ததாக ஜாக்கி சான் கூறினார்.

ஜாக்கி சான் தந்தை உளவாளி

தந்தை பற்றி ஜாக்கிசான் கூறியதாவது : “என் அப்பா அழகானவர். அவர் ஒரு உளவாளி. எனக்கு 40 வயதாகும்போது, அவரது ரகசியம் எனக்குத் தெரியவந்தது. ஒருநாள் நானும் அப்பாவும் காரில் பயணித்தபோது, 'மகனே, எனக்கு வயதாகிவிட்டது. நான் ஒருநாள் தூங்கி எழாமல் போகலாம். அதற்கு முன், உன்னிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும். நீ சான் அல்ல. உன் உண்மையான பெயர் ஃபாங்' என்று அவர் கூறினார். அப்பா உளவாளி என்று சொன்னது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள எனக்கு சிரமமாக இருந்தது' என்று ஜாக்கி சான் கூறினார்.

2003 இல் வெளியான 'டிரேஸ் ஆஃப் தி டிராகன்: ஜாக்கி சான் அண்ட் ஹிஸ் லாஸ்ட் ஃபேமிலி' என்ற ஆவணப்படம் அவரது வாழ்க்கையை விவரித்தது. 1940 களில் சீன உள்நாட்டுப் போரின்போது ஜாக்கி சானின் தந்தை உளவாளியாகப் பணியாற்றியதாகவும், அவரது தாய் கள்ளக் கடத்தல்காரர் மற்றும் சூதாட்டக்காரர் என்றும் அந்த ஆவணப்படம் கூறியது. இதை ஜாக்கி சான் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறி இந்த தகவ்ல் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் ஜாக்கி சான் விரைவில் தென்னிந்திய சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி மலையாளத்தில் 2018 என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்க உள்ள புதிய படமொன்றில், ஜாக்கி சானையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இது உறுதியானால் அவர் அறிமுகமாகும் தென்னிந்திய படமாக இது அமையும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?