பாம்பு சட்டை படத்தின் சிம்பிள் விமர்சனம்....

First Published Mar 24, 2017, 4:54 PM IST
Highlights
pambu sattai review


எப்போது இந்த படம் வரும் என மிகபெரிய இடைவேளைக்கு பிறகு வெளிவந்திருகிறது “பாம்பு சட்டை” கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த போது கமிட் ஆகி, தற்போது அவர் முன்னணி நடிகையாக இருக்கும் போது ரிலிஸாகியுள்ளது உள்ளது இந்த படத்தில் கீர்த்தி மற்றும் பாபி சிம்ஹா எப்படி...?

கதை

Latest Videos

மிக எளிமையான கதையை கொஞ்சம் வித்தியாசமாக கூற முயற்சி செய்துள்ளார் இயக்குனர். பாபி சிம்ஹா தன்னுடைய அண்ணியுடன் வசித்து வருகிறார்.தன்னுடைய அண்ணிக்கு மாப்பிள்ளை பார்க்கும் பாபி சிம்ஹா அதற்கான பணத்தை புரட்டும் போது சிக்கலில் மாட்டி கொள்கிறார் அதில் இருந்து மீண்டு, தன்னுடைய காதலியான கீர்த்தியை கைபிடித்தாரா? இல்லையா? என்பது தான் கதை...

திரைக்கதை பற்றிய அலசல்...

பாபி சிம்ஹா தண்ணீர் கேன் போடும் வாலிபர் கதாபாத்திரத்திற்கு அருமையாக பொருத்தி இருக்கிறார், அதற்கு ஏற்றார்போல் சோகமாக முகத்தோடு பார்ப்பவர்கள் மனதை கலங்க வைத்துள்ளார்... ஓவர் மேக்கப்பில் சமீப காலமாக நடித்து வந்த கீர்த்தி இதில் மேக்கப் இல்லாமல் நடித்து அசத்தி இருக்கிறார். சாக்கடை அள்ளுபவர் மகள் எத்தகைய மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார் என்கிற கதாபாத்திரத்தை அழகாக பிரதிபலித்துள்ளார்.

சாக்கடை அள்ளுபவராக வரும் சார்லி தன் பெண் மீது வைத்துள்ள பாசத்தை வெளிக்காட்டும் விதம் அமேசிங் என சொல்ல வைக்கிறது, அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளார் சார்லி.

பணம் பத்தும் செய்யும் அந்த பத்தையும் செய்யாமல் ஒருவனால் இருக்க முடியுமா? கஷ்டத்தின் போதும் பணத்தை தூக்கி எறிபவன் எவனும் இல்லை, அதையும் மீறி தூக்கி எறிந்து ஒரு வேலை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் மக்களும் உள்ளார்கள் என்பதை அழுத்தமாக கூறியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் ஆடம் தாஸ்.

இப்படி தவறு செய்து பிழைப்பதற்கு ரோட்டில் அம்மணமாக ஓடலாம் என்று வசனத்தை மட்டும் வைக்காமல் ,செய்யாத தவறு, ஆனால், செய்ய தோன்றியதே தவறு தான் என நினைத்து பாபி துணியில்லாமல் ரோட்டில் ஓடுவது,சோமசுந்தரத்தை பாபி கடத்தி வைத்துவிட்டு, அவர் மனைவியிடம் பணம் கேட்கும் போது அவர் கர்ப்பம் என தெரிந்து அவரே மலையிலிருந்து இறங்கி ஓடி வருவது என பல இடங்களில் கிளாப்ஸ் அள்ளுகின்றது.

படத்தின் இரண்டாம் பாதியில் குத்து பாட்டு இருக்கா? என இந்த படத்திலேயே கிண்டலுக்கு ஒரு காட்சி வரும்,அதற்காக இத்தனை யதார்த்தமான படத்தில் குத்து பாட்டு வைப்பது நியாயமா? அதை தவிர்த்திருக்கலாம், பாபி பணத்திற்காக பாக்ஸிங் செய்யும் காட்சி கொஞ்சம் செயற்கைத்தனம்.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு சென்னை திரிசூலத்தை ஒரு ரவுண்ட் அடித்தது போல் உள்ளது அத்தனை யதார்த்தம்,அஜீஸ் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றாலும், பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.

தூள்

தற்போது அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனையை சொன்னதற்காகவே ஆடம் தாஸிற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம்.

நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு.

படத்தின் வசனம் மற்றும் ஒளிப்பதிவு.

மொக்கை

கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை,

கீர்த்தியின் சிரிப்பு ரொம்ப, அதிகமாக வாயை திறந்து சிரித்துள்ளது மைனஸ்.

முடிவு:

மொத்தத்தில் ஒருமனிதன் வாழ்வை எப்படி எல்லாம் எதிர்கொள்கிறான் என எதார்த்தமாக கூறியுள்ளது.

click me!