அமீர் கானை கொலை குற்றவாளியாக்கிய பாகிஸ்தான் டி.வி.... கொதித்தெழுந்த ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 22, 2020, 06:42 PM IST
அமீர் கானை கொலை குற்றவாளியாக்கிய பாகிஸ்தான் டி.வி.... கொதித்தெழுந்த ரசிகர்கள்...!

சுருக்கம்

இப்படிப்பட்ட அருமை, பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரரான அமீர் கானை பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று கொலை குற்றவாளி என செய்தி ஒளிப்பரப்பு செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

உலக நாயகன் கமல் ஹாசனுக்கு அடுத்ததாக சினிமாவிற்காக எதையும் செய்யத் தயங்காதவர் பாலிவுட் நடிகர் அமீர் கான். உடலை முறுக்கேற்றி சிக்ஸ் பேக்ஸ் வைக்கச் சொன்னாலும் சரி, குண்டாக தொப்பை வைத்து நடிக்கச் சொன்னாலும் சரி, இல்ல ஆளே அடையாளம் தெரியாமல் இளைத்து போகச் சொன்னாலும் சரி தசாவாதாரத்திற்கு தயாராக நிற்பார். பாலிவுட் படங்களில் பல புதுமையான முயற்சிகளையும், கதைகளையும் முயற்சி செய்வதில் முதன்மையானவர். நடிப்பு ராட்சசனான அமீர்கான் தனது படத்திற்காக தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார். 

அப்படி அமீர் கான் போடாத கெட்டப்புகள் இல்லை, இந்தியா முழுவதும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இப்படிப்பட்ட அருமை, பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரரான அமீர் கானை பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று கொலை குற்றவாளி என செய்தி ஒளிப்பரப்பு செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


பாகிஸ்தானைச் சேர்ந்த் எம்.க்யூ.எம். தலைவர் அமீர் கான் என்பவரை கொலை குற்றவாளி என்று செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் போது, இந்தி நடிகர் அமீர் கானின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த தவறை கவனித்து, சில நிமிடங்களிலேயே போட்டோவை மாற்றியுள்ளனர். 

இருந்தாலும், சில நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பான அந்த வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் அமீர் கான் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். இந்தியாவில் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பினாலும் தங்களது தரப்பில் ஏற்பட்ட தவறுக்கு தொலைக்காட்சி நிர்வாகம் எவ்வித விளக்கமும் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?