தேர்தல் முடியும் வரை காத்திருப்போம்.. "தங்கலான்" படக்குழுவின் புது பிளான் - தயாரிப்பாளர் அளித்த புது தகவல்!

Ansgar R |  
Published : Feb 17, 2024, 02:26 PM IST
தேர்தல் முடியும் வரை காத்திருப்போம்.. "தங்கலான்" படக்குழுவின் புது பிளான் - தயாரிப்பாளர் அளித்த புது தகவல்!

சுருக்கம்

Thangalaan Release Date : தமிழ் சினிமாவில் இந்த 2024ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று தான் தங்கலான். முதல் முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ளார் விக்ரம்.

தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாதை வகுத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மிகச்சிறந்த நடிகர் தான் விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு, தான் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடலை வருத்தி, உருமாற்றி நடிக்கும் தன்மையை கொண்ட வெகு சில நடிகர்களில் விக்ரம் அவர்களும் ஒருவர். 

கடந்த 34 ஆண்டுகளாக தமிழ் திரை உலகம் மட்டுமில்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் விக்ரம் இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு முதல் முறையாக பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இணையும் தங்கலான் திரைப்படத்திலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். 

தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள்.. கல்யாண பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்..

இந்நிலையில் "தங்கலான்" திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தொழில்நுட்ப பணிகள் முடிக்காமல் இருந்த நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கி வரும் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் தனஞ்ஜெயன் அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கு பிறகு இந்த திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிகளிலும் சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Nivisha Hospitalized: சன் டிவி சீரியல் ஹீரோயினுக்கு என்ன ஆச்சு? திடீர் என மருத்துவமனையில் அனுமதி!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!