இதுவரை நடிக்காத ஒரு ரோல்.. துணிந்து இறங்கும் சிம்பு.. மாஸ் பிளானில் தேசிங்கு - தீயாய் பரவும் STR48 அப்டேட்!

Ansgar R |  
Published : Feb 16, 2024, 09:56 PM IST
இதுவரை நடிக்காத ஒரு ரோல்.. துணிந்து இறங்கும் சிம்பு.. மாஸ் பிளானில் தேசிங்கு - தீயாய் பரவும் STR48 அப்டேட்!

சுருக்கம்

STR 48 Story Update : பிரபல இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகின்றார் நடிகர் சிலம்பரசன்.

கடந்த 2020 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக களம் இறங்கியவர் தான் தேசிங்கு பெரியசாமி. அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் எந்த திரைப்படத்தையும் இயக்காத நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் உருவாக உள்ள அவருடைய 48 ஆவது வரை படத்தை இயக்குகிறார். 

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கி வரும் தேசிங்கு பெரியசாமி, சிம்புவை இரட்டை வேடங்களில் நடிக்கவைக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்திற்காக சிம்பு பிரத்தியேகமான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், பல வெளிநாடுகளில் இதற்கான படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஆர்யா, பரத், உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்! சென்னை ரைனோஸ் அணி முழு விவரம்!

இம்மாத இறுதியில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், அந்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ள கதாபாத்திரங்கள் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சிம்பு இந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் இரு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரம் திருநங்கையின் கதாபாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
ஹாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஸ்பார்ட்டன்ஸ் 300 திரைப்படத்தை ஒத்த கதை அமைப்பு கொண்ட படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் பாகுபலி கதையை போல இந்த படம் இருக்காது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

War 2: RRR பட நாயகன் ஜூனியர் என்டிஆருடன் ஹிரித்திக் ரோஷன் இணையும் வார் 2! விரைவில் துவங்கும் படப்பிடிப்பு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?