தங்கலான் டீசர் ரெடி... எப்போ ரிலீஸ்? பா.இரஞ்சித் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்டால் ஹாப்பியான ரசிகர்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை இயக்குனர் பா.இரஞ்சித் வெளியிட்டு உள்ளார்.


பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், மலையாள நடிகை பார்வதி, நடிகர் பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

தங்கலான் படம் கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் விக்ரம். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் தங்கலானும் ஒன்று. இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஏற்கனவே பொங்கல் ரேஸில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் மற்றும் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த அயலான் ஆகியவை உள்ள நிலையில், தங்கலானும் அந்த ரேஸில் இணைய காத்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக டீசர் வெளியிடும்போது அதன் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித், தங்கலான் பட டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அடுத்த வாரம் தங்கலான் டீசர் ரிலீஸ் ஆகும் என அவர் கூறி உள்ளார். அடுத்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை வருவதால், அப்போது தங்கலான் டீசர் வெளியிடப்படும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

இதையும் படியுங்கள்... முடிவுக்கு வந்த 14 வருட திருமண வாழ்க்கை... ஷில்பா ஷெட்டியை விவாகரத்து செய்துவிட்டதாக ராஜ்குந்த்ரா அறிவிப்பு

click me!